.

Pages

Thursday, November 17, 2016

மல்லிபட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் !

மல்லிபட்டினம், நவ-17
எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் செயற்குழு கூட்டம் மல்லிப்பட்டினத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இசட். முஹம்மது இலியாஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜே. ஹாஜி ஷேக் துவக்கவுரை நிகழ்த்தினார்.

எஸ்டிபிஐ கட்சி சார்பில் வரும் டிசம்பர் 06 ந் தேதி அன்று தேசம் தழுவிய நடத்த உள்ள ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் தலைநகர் தஞ்சாவூரில் நடத்துவது எனவும்,  தஞ்சாவூர் மாவட்டம் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கும்கோணத்தில் வரும் நவம்பர் 26 ந் தேதி நடத்த இருக்கும் பொது சிவில் சட்ட எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரிப்பது. மேலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அனைத்து இடங்களிலும் மாற்றுவதற்கு காலஅவகாசம் நீட்டிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர். கூட்ட முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒய்.அபுல் கலாம் ஆசாத் நன்றி கூறினார்.

இந்தக்கூட்டத்தில் கட்சி மாவட்ட நிர்வாகிகள், அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூர், மல்லிபட்டினம் உள்ளிட்ட பகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.