தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (21.11.2016) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது:
டி.ஜேக்கப், பிரவின்குமார், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திருமதி.ஜானகி ஆகியோர் கொண்ட மத்தியக் குழு வருகின்ற 23.11.2016 அன்று வருகை தர உள்ளனர். இக்குழு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிளைகள், ஏடிஎம்கள் மற்றும் தபால் நிலையங்கள், பணம் கிடைக்கும் வாய்ப்பு, பணம் திரும்ப பெறுதல், நாணயங்கள் பரிமாற்றம், தபால் நிலையங்களில் ஏடிஎம்களின் அளவீடுகள் போன்றவை நேரடியாக ஆய்வு செய்யவுள்ளனர். இக்குழுவானது விவசாயிகள், ஊதியம் பெறுவோர், வர்த்தகர்கள், போக்குவரத்து தொழிற்சாலைகள், முறைசாரா துறைகள், சிறு வணிகம் ஆகியோர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வருகை தர உள்ளனர்.
வங்கியாளர்கள் அந்தந்த வங்கிகளின் முன்புறம், வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர் வசதி, சாமியானா பந்தல், அமர்வதற்கு நாற்காலிகள் போன்றவை செய்து கொடுக்க வேண்டும். கர்ப்பினி தாய்மார்கள், முதியோர்களுக்கு வங்கியாளர்கள் முன்னுரிமை அளித்து அவர்களுக்கு உடனடியாக பணத்தை மாற்றிக் கொடுக்க வேண்டும். முதியோர்; உதவித்தொகை பெறும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆகியோர்களுக்கு மாதாமாதம் அரசு வழங்கும் உதவித்தொகைகள் தாமதமின்றி தடையில்லாமல் உடனடியாக வழங்க வேண்டும் என வங்கியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் முன்னோடி வங்கிகளின் மேலாளர் சீனிவாசன், பாரத வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற வங்கிகளின் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.