அதிராம்பட்டினத்தில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் இந்து கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் வாலிபர் இந்துமத கலாச்சாரப்படி சீனப்பெண்ணுக்கு தாலி கட்டிய திருமண நிகழ்ச்சி அதிராம்பட்டினத்தில் திருமணம் மஹாலில் நடைப்பெற்றது.
அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் செந்தில்குமார் (வயது 30) இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருடன் பணிபுரிந்து வந்த சீன நாட்டை சேர்ந்த சூகியோமின், சூயோங்கியா தம்பதியரின் மகள் சூயூலன் ( வயது 26 ) என்பவருடன் நட்பு ஏற்பட்டது பின்னர் இது நாளடைவில் காதலாக மாறியது இதையடுத்து செந்தில்குமார் மற்றும் சூயூலன் இருவரும் தன் பெற்றோரிடம் திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தை தெரிவித்தனர்.
இருவரது வீட்டிலும் இவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அதிராம்பட்டினத்தில் திருமணம் இந்து முறைப்படி நடைப்பெற்றது இதைக்கான உறவினர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கூடி நின்று மணமக்களை வாழ்த்தினர்.
இதுகுறித்து மணமகள் சூயூலன் கூறுகையில்;
நானும் செந்தில்குமாரும் ஒரே கம்பெனியில் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம் அவருடன் பழகியபோது அவர் இந்தியக்கலாச்சாரம் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றியது என் மனதைக்கவர்ந்தது எனவே இந்திய தமிழ் கலாச்சாரப்படி வாழ வேண்டும் என்று அவரை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற விருப்பத்தையும் அவரிடம் தெரிவித்தேன் அதற்கு ஒப்புதல் அளித்ததோடு எங்கள் இருவரிடம் பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் திருமணம் நடைப்பெற்றது என்று மிகப்பெரிய சந்தோசம் என்றார்.
இதுகுறித்து மணமகன் செந்தில் குமார் கூறுகையில்;
நான் சிங்கப்பூரில் (பி.ஆர்) நிரந்தர வாசியாக உள்ளேன் காதலித்து திருமணம் செய்ய இருவரும் ஆசைபட்டோம் சென்ற 25-3-2016 அன்று சிங்கப்பூர் வீரமாகாலியம்மன் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமனம் செய்து கொண்டம் சொந்த ஊரில் தமிழ் முறைப்படி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்வதற்கு ஆசைப்பட்டோம் சிங்கப்பூரில் இருந்து 22ந்தேதி சொந்த ஊரான மகிழங்கோட்டைக்கு வந்தோம் தமிழ் முறைப்படி பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோரின் விருப்ப படி அதிராம்பட்டினம் பவித்ரா திருமண மஹாலில் தமிழ் கலாச்சரப்படி எங்கள் திருமணம் நடைப்பெற்றது மேலும் சீனாவில் எனது மனைவி கலாச்சாரப்படி அங்கு திருமணம் செய்துகொள்ள உள்ளோம் எனது மனைவி பெயர் தமிழ் முறைப்படி யாழ்னி என்று பெயர் கூறி அழைத்து வருகிறோம் என்று கூறினர்.
மணமக்கள் வாழ்க . யாதும் ஊரே யாவரும் கேளிர். ஒரு ஜோடி மூன்று திருமணங்கள். ஜமாயுங்க.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமணமக்களுக்கு வாழ்த்துக்கள்.பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! தலை தீப்பாவளியை சீன பட்டாசுவெடித்துக்கொண்டாடுங்கள்
ReplyDeleteGreetings
ReplyDeleteCongratulation
ReplyDeleteBest wishes to the married couple and God blessing
ReplyDeleteBest wishes to the married couple and God blessing
ReplyDeleteCongratulation Jayabalu.
ReplyDeleteConvey my best wishes to the married couple.
Congrats
ReplyDelete