அதிராம்பட்டினம், அக்-21
இஸ்லாமிய ஷரியத் சட்டம் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் பொதுசிவில் சட்டம் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை தக்வா பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.
கூட்டத்தில் இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மவ்லவி முஹம்மது இத்ரீஸ் அறிமுக உரை நிகழ்த்தினார்.
சிறப்பு அழைப்பாளராக சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் ஷம்சுதீன் காசிமி கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டு வர முனைப்பு காட்டும் பொதுசிவில் சட்டம் குறித்து விழிப்புணர்வு விளக்க உரை நிகழ்த்தினார்.
தொடக்கத்தில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் இமாம் சஃபியுல்லா அன்வாரி, இஸ்லாமிய மார்க்க விளக்க பிரசாரகர் அப்துல்லா தவ்ஹீத் ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
இக்கூட்டத்தில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், அதிராம்பட்டினம் அனைத்து பகுதிகளை சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள், தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ, அதிரை தாருத் தவ்ஹீத் உட்பட அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 1300 பேர் கலந்துகொண்டனர்.
அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் பொதுமக்களிடம் ஆதரவு கோரி படிவங்கள் வெளியிட்டுள்ளது. அதில், இஸ்லாமிய சட்டமுறைகளில் குறிப்பாக நிக்காஹ், தலாக், குலா, ஃபஸ்க், வராசத் ( வாரிசுரிமை ) குறித்த சட்டங்கள் எங்களுக்கு முழு திருப்தி அளிக்கிறது எனவும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தான் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கு இந்திய அரசியல் சாசனம் முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளது. எனவே பொதுசிவில் சட்டத்தை நாங்கள் எந்தவடிவத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், ஷரியத் சட்டங்களை பாதுகாக்க அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியத்துடன் முழுமையாக நிற்போம் என கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இவற்றில் உடன்படுவதாக படிவத்தில் கையொப்பமிட்டு உறுதி செய்தனர்.
மேலும் கூட்டத்தில் கலந்துகொண்ட பலர் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் ஆதரவு கோரி கையொப்பம் பெற படிவங்களை பெற்றுச்சென்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.