.

Pages

Sunday, October 23, 2016

நம்பிக்'கை' நட்சத்திரம் 15 வயது கண்மணி சசி !

குறிப்பு: இந்தப் பதிவு இசையை ஆதரிப்பதற்கல்ல மாறாக பிறருக்கு வாழ்வில் நம்பிக்கையளிக்கும் ஒரு உந்துசக்தியை மனமுவந்து போற்றுவதற்காக மட்டுமே.

துபாயில் கடந்த 2016 அக்டோபர் 20 ஆம் தேதி நடந்த மலையாளிகளின் ஓணம் தொடர்புடைய ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அசத்தியவர் 15 வயதுடைய 10 ஆம் வகுப்பு மாணவி கண்மணி சசி என்கிற பிறப்பிலேயே இரு கைகளுமின்றி ஆனால் தன்னம்பிக்'கை'ளுடன் பிறந்தவர்.

கேரள மாநிலம் ஆழப்புலாவை சேர்ந்த, இரு கலைகளில் ஆற்றல் பெற்றுள்ள இந்த கண்மணி தனது கால்களால் அற்புதமான கேன்வாஸ் படங்களை வரைந்தும் இனிய குரலால் பாடியும் ஈர்க்கின்றார்.

நம்பிக்கை குறித்து இவர் ஆற்றும் உரைகள் காலத்தை குறைகூறி நொண்டியடித்துக் கொண்டுள்ள இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஒரு உத்வேகத்தை தூண்டி சாதிக்கச் செய்யும் நடமாடும் ஆப் (App) என்றால் மிகையில்லை.

குறைகளை பெரிதாக்கி வீட்டோடு முடங்கிவிடாமல் அடுத்தவர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் செயலியாய் திகழும் இந்த குழந்தை நட்சத்திரம் நேர்வழி வாழ வாழ்த்துவோம்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.