.

Pages

Tuesday, October 25, 2016

துபாய் பழைய வில்லாக்களில் புதிய தீ எச்சரிக்கை கருவி பொருத்த உத்தரவு !

அதிரை நியூஸ்: துபாய், அக்-25
துபாயில் நிகழும் தீ விபத்துக்களில் நெருப்பால் தாக்கப்பட்டு இறப்பவர்களைவிட புகையால் ஏற்படும் மூச்சுத்திணறலால் 70 சதவிகிதம் பேர் கூடுதலாக இறக்கின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் இத்தகைய தீ விபத்துக்களும் மூச்சுத் திணறல் பலிகளும் மக்கள் உறங்கும் போதே ஏற்படுகின்றன என்பதால் புதிய நவீன வகை புகையை ஆரம்ப நிலையிலேயே நுகர்ந்து எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகளை (Smart Smoke Detector) புதிய கட்டிடங்களில் பொருத்தி வருகின்றனர்.

இத்தகைய நவீன கருவிகளை பழைய வில்லாக்களிலும் கட்டாயம் பொருத்த வேண்டும் என துபை தீயணைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இவை பழைய கருவிகளை விட அதிக சப்தம் எழுப்பக்கூடியவை என்பதுடன் 'ப்ளுடூத்' தொழில் நுட்பத்தால் ஒரே கட்டிடத்தின் பிற பகுதியிலுள்ள ஒலி எழுப்பும் கருவிகளுடனும் (Fire Alarms) இணைக்கப்பட்டிருக்கும் என்பதால் தூக்கத்தில் நிகழும் தீ மற்றும் மூச்சுத் திணறல் மரணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.