.

Pages

Monday, October 17, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக்கம் மற்றும் வரவேற்பு விழா !

அதிராம்பட்டினம், அக்-17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக்க விழா, இளங்கலை, முதுகலை, எம்.பில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விழா, வன விலங்கு நாள் கொண்டாட்டம் மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்புக்கான விருந்தினர் விரிவுரை சனிக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

தொடக்கத்தில் விலங்கியல் சங்கம் அமைப்பாளர் முனைவர் ஏ அம்சத், வரவேற்பு உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ எம் உதுமான் முகையதீன் தலைமை உரை நிகழ்த்தினார்.  விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் டாக்டர் பி குமாரசாமி   விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக, சிஏஎஸ் கடல் உயிரியல் துறை பேராசிரியர், டாக்டர்  என் வீரப்பன்இ  'கடல்வாழ் உயிர் வளங்கள் பாதுகாப்பு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் உரையில்  கடல் மீன், முத்து, பவளம், சங்கு வகைகள் மற்றும் பல்வேறு உயிர் வளங்களைக் தன்னகத்தே கொண்டுள்ளது எனவும், பவளப்பாறைகள் கடல்பகுதியில் தட்ப வெட்ப நிலையினை சமப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றுகிறது  எனவும், கடல் வாழ் உயிரினங்கள் அழிவதால் கடல் மாசுபாடு அதிகரித்து மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும், இந்நிலையை மாற்ற இயற்கை வளத்தை காக்கும் கடமை அதிலும் சுற்றுச்சூழலுக்கு உதவியாக உள்ள கடல் வளத்தினையும் கடல் வாழ் உயிரினங்களுக்கு தேவையாக இருக்கும் பவளப்பாறைகளினை பாதுக்காக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது எனத்தெரிவித்தார்.

விழாவில் முனைவர் எஸ் ரவீந்தரன், முனைவர் முத்துகுமாரவேல், முனைவர் ஓ சாதிக்,  முனைவர் வி கானப்ரியா, முனைவர் ஏ மாஹராஜன், மற்றும் முனைவர் ஜே சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் விலங்கியல் சங்கம் செயலாளர்,  மாணவர்  பி. முருகேசன்  நன்றியுரை வழங்கினார்.

இவ்விழாவில் காதிர் முகைதீன் கல்லூரியின் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.