.

Pages

Saturday, October 22, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற துவக்க விழா ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில்
ஆங்கில இலக்கிய மன்ற 2016 - ஆம் ஆண்டின் துவக்க விழா நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்கள் குறித்த அறிமுக உரையை விழாவில் முன்னிலை வகித்த ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் ஏ. முகம்மது முகைதீன் வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக வேலூர் திருவள்ளுவர் பல்கலைகழக ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் பி.கதிரேசன் கலந்துகொண்டு பேசுகையில்; ஆங்கிலம் இலக்கியம் கற்பதால் கற்பித்தல், மொழிபெயர்ப்பு, சுற்றுலாத்துறை, வரவேற்பாளர் மற்றும் பத்திரிகை துறை ஆகியவற்றில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் தரக்கூடிய துறைகளைப் பட்டியலிட்டு பேசினார்.

தொழில்நுட்ப எழுத்து ( Technical Writing ), ஆன்லைன் மூலம் கற்பித்தல், ( Online Teaching ) உள்ளடக்க எழுத்து ( Content Writing ), கல்வி சார்ந்த எழுத்து ( Academic Writing ) மற்றும் பிழை திருத்துதல் ( Proof Editing ) ஆகிய துறைகளில் வேலை வாய்ப்பு குவிந்து கிடக்கின்றன. இவற்றைத் தம் வசப்படுத்த வேண்டுமானால் மாணவர்கள் தங்கள் ஆங்கிலப் புலமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு கவனித்தல் ( Listening), பேசுதல் ( Speaking ), படித்தல் ( Reading ) மற்றும் எழுதுதல் ( Writing ) ஆகிய மொழித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்தவர் பேசுவதை கவனிக்கும் திறன் இருந்தால் நமது பேசும் திறன் மேம்படும். ஆங்கில மொழி என்பது கடையில் விற்பனையாகும் அருமருந்து அல்ல, அது ஒரு மொழி அதனை நாம் அடைய நிறைய கற்க வேண்டும்' என்றார்.

தொடக்கத்தில் கல்லூரி இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர் வி அபிசேக் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் இரண்டாம் ஆண்டு மாணவி கே.ஐஸ்வர்யா தொகுத்து வழங்கினார். விழா முடிவில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி எம். ஆசியா அம்மாள் நன்றி கூறினார்.

இவ்விழாவில் காதிர் முகைதீன் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் எம். சிக்கந்தர் பாஷா, பேராசிரியைகள் எம்.ஏ தஸ்லீமா, இ. பிளோமினா மற்றும் கல்லூரி துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.