.

Pages

Saturday, October 22, 2016

உரிமம் இன்றி பட்டாசுக் கடை நடத்தக் கூடாது: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை !

தஞ்சாவூர் மாவட்டத்தில் உரிமம் இன்றி பட்டாசுக் கடை நடத்தக் கூடாது என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.

மாவட்டத்தில் வெடி விபத்து இல்லாமல் பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாடுவது குறித்து ஆட்சியரகத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
தீபாவளி பண்டிகையின்போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை கடைகள் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வெடிபொருள் சட்டத்தின்படி பட்டாசு கடை உரிமைதாரர்கள் உரிமம் இல்லாமல் கடை நடத்தக் கூடாது. தங்களுடைய உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உரிமம் பெறாமலோ, புதுப்பிக்கத் தவறினாலோ வெடிபொருள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பட்டாசு தயாரிப்பு தலங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் உரிய பாதுகாப்பு முறைகளின்படி தீத்தடுப்புக் கருவிகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பட்டாசு விற்பனைக் கடைகளின் அருகில் மின்மாற்றிகள், தேநீர் கடைகள், இரவு - பகல் நேர நடமாடும் உணவு விடுதிகள் இருக்கக் கூடாது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் எரியும் விளக்குகள் மற்றும் எரிவாயு விளக்குகளைப் பயன்படுத்தக் கூடாது. பொருத்தி வைக்கப்பட்ட மின் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

சில்லறை விற்பனைக்காகப் பட்டாசு கொள்முதல் செய்யப்படும் முன்பாக வணிகவரித் துறையினரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். தாற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற்ற உரிமதாரர்கள் தங்களது கடைகளை ஒன்றுக்கொன்று குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும். பட்டாசு வான வேடிக்கை நிகழ்ச்சிகள் உரிம தலத்திலிருந்து 50 மீட்டருக்குள் நடத்தப்படக் கூடாது.

அனைத்து வெடிபொருள் நிலையங்கள் மற்றும் சில்லறை பட்டாசு விற்பனை நிலையங்களை ஆய்வு செய்ய மாவட்டம் முழுவதும் 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறல்கள் இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும். தடை செய்யப்பட்ட வெடிபொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ. மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.