.

Pages

Friday, October 21, 2016

ஸ்பெயினில் 62 வயது முதிய பெண்ணுக்கு 3 வது குழந்தை பிறந்தது

அதிரை நியூஸ்: அக்-21
ஸ்பெயினின் லூகோ (Lugo) நகரைச் சேர்ந்த சேர்ந்த 62 வயதுடைய முதிய பெண்ணுக்கு 3 வது குழந்தை சிசேரியன் மூலம் பிறந்தது.

இந்தப் பெண்ணுடைய முதல் மகனுக்கு 27 வயதும் இரண்டாவது குழந்தைக்கு 10 வயதும் ஆகின்றன.
லினா அல்வாரெஸ் (Lina Alvarez) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தக் குழந்தைக்கு பின்னாலுள்ள அல்வாரெஸ் எனும் பெயர் அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டரின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் அல்வரெஸ் இந்த முதிய வயதில் கர்ப்பம் அடைவதை பற்றி கூறும் போது, இது இறைவனின் வரம் உங்களால் பிள்ளை பெற்றுக் கொள்ள முதிய வயதிலும் முடியுமானால் எதை குறித்தும் கவலைப்படாமல் பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள் மாறாக உங்களின் மகப்பேறு மருத்துவரை முடிவெடுக்க விடாதீர் என நம்பிக்கையளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

டாக்டர் இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க எங்க நாட்டுகாரங்க காதுலையும் விழட்டும்!

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. ஸ்பெயின் ரெம்போ குளிரான நாடோ?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.