அமெரிக்காவில், இட்லி மாவு தயாரிப்புக்கு, 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு கிரைண்டர்களுக்கு, கோவையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு, 'ஆர்டர்' வழங்கப்பட்டுள்ளது.
நம்மூரின் இட்லி, தோசை உணவு வகைகள், தற்போது, நாடு முழுவதும் பிரபலமாகி வருகின்றன. சமீபகாலமாக, அமெரிக்காவில் பலதரப்பட்ட மக்கள் விரும்பும் உணவாகவும் மாறியிருக்கிறது.
நேரமின்மை உட்பட பல்வேறு காரணங்களால், மாவு தயாரிக்க முடியாத சூழலில், அங்கு, மாவு விற்பனைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள, ஒரு அமெரிக்க நிறுவனம், 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட, நான்கு கிரைண்டர்களை தயாரிக்க, சரவணம்பட்டி, 'டிரைடென்ட் இன்ஜினியர்ஸ்' நிறுவனத்துக்கு 'ஆர்டர்' வழங்கியுள்ளது.
நிர்வாக பங்குதாரர் செல்வராஜ் கூறியதாவது: அமெரிக்க வாடிக்கையாளர் பிரதீபன் சீனிவாசன், தானியங்கி அம்சங்களுடன், 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட, நான்கு 'டில்டிங்' கிரைண்டர்கள் தயாரிக்க 'ஆர்டர்' கொடுத்தார். இதுவரை, 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட கிரைண்டர்களே
தயாரிக்கப்பட்டுள்ளன.
முதல் முறையாக, இந்தியாவில் தயாரிக்கப்படும், 100 லிட்டர், 'ஆட்டோமேடிக் டில்டிங்' கிரைண்டர் இது தான்.இருபுறமும் சாய்த்து மாவு எடுக்கும் வசதி உள்ளது. 100 ஆர்.பி.எம்., வரை வேகத்தை மாற்றியமைக்க முடியும். கிரைண்டர் டிரம்மில் உள்ள கல்லின் எடை, 500 கிலோ.
மேனுவல், ஆட்டோமெடிக், ஆட்டோ கன்ட்ரோல் மற்றும் ஆட்டோ டில்டிங் என, மூன்று வகையில் இயக்கலாம். கிரைண்டரின் மொத்த எடை, இரண்டு டன். ஒரு கிரைண்டரின் விலை, 5.50 லட்சம் ரூபாய்.இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி:தினமலர்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.