அதிரை நியூஸ்: துபாய், அக்-18
துபையில் நடைபெற்று வரும் ஜீடெக்ஸ் டெக்னாலஜி வீக் கண்காட்சியில் துபை ரோபோ போலீஸ் உட்பட பலவகை ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் மியோ (MEO) என்று பெயரிடப்பட்டுள்ள போலீஸ் ரோபோ 2017 ஆண்டு முதல் தனது பணியை துவங்கவுள்ளது.
மியோ (MEO) போலீஸ் ரோபோ:
இந்த வகை ரோபோக்கள் குறிப்பிட்ட பிரதேசங்களில், குடியிருப்பு பகுதிகளில் ரோந்து சுற்றி வரும் போது எதிர்படும் அந்தப் பகுதிக்கு சம்பந்தமில்லாத அந்நியர்களை நிறுத்தி விசாரிக்கும். நாம் உடனே ரோபோவில் உள்ள சிவப்பு பட்டனை அழுத்தி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு நம்மை பற்றிய விபரங்களை, அந்தப் பகுதிக்கு வந்த காரணத்தை தெரிவிக்க வேண்டும் இல்லையேல் வந்த வழி திரும்ப வேண்டும்.
நம்மை விசாரிக்கும் போதே சூழலும் கேமிரா நம்மை ஸ்கேன் செய்து வீடியோ பதிவுகளாக கட்டுப்பாட்டு அறைக்கு (Control Room) அனுப்பும் ஆற்றல் இதற்கு உண்டு. இதன் விலை 1.8 மில்லியன் திர்ஹம் மட்டுமே. தனியார் நிறுவனங்களும் இந்த ரோபோக்களை வாங்கி பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
விஸோ (WISO) ரோபோ:
பன்முகத் திறமைவாய்ந்த இந்த ரோபோக்கள் செவிலியர் உதவிகள் (Nurse Assistant), தீயணைப்பு வீரர் (Fire Fighter), வெயிட்டர் (Waiter) போன்ற பணிகளை செய்யும்.
இதற்கு மாற்றாக கடுமை முக தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டு இதே வகை ரோபோக்கள் டிபி வேர்ல்டு (DP World) எனும் துறைமுக கழக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. பார்க்கிங் பகுதிகளில் ரோந்து சுற்றுவதுடன் வாடிக்கையாளர்களையும், விருந்தினர்களையும் வரவேற்று அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வழிகாட்டி கொண்டுவிடும். இதுவும் உங்கள் முகத்தை அடையாளம் வைத்துக் கொள்ளக்கூடியது.
ஸாஃதா (SAA'DAH) பெண் ரோபா:
இந்த பெண் தோற்றமுடைய ரோபோக்கள் டெர்மினல் 2, துபை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை புன்னகையுடன் 'ஹலோ' சொல்லி வரவேற்கும். அதேவேளை உங்களுடைய முகத்தை ஸ்கேன் செய்து நீங்கள் கஸ்டம்ஸ் மற்றும் விசா சேவைகளின் போது மகிழ்ச்சியாக உள்ளீர்களா என வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் அனுப்பும், அதற்குப்பின் மகிழ்ச்சியான பயணிகள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மொபைல் போனை பரிசாக பெறுவார்.
அந்த ரோபோ புள்ளைய பாக்கும் போது பெருசா சிரிச்சி வைங்க மொபைல் கிடைக்கலாம்.
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.