.

Pages

Wednesday, October 26, 2016

கயிறு மற்றும் கயிறு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி பற்றிய அறிவிப்பு !

கயிறு மற்றும் கயிறு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியில் சேர வரும் நவம்பர் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தஞ்சை பிள்ளையார்பட்டியில் மத்திய அரசின்கீழ் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் கயிறு ஆர்டிசன் பயிற்சி 6 மாதத்துக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். எழுத படிக்க தெரிந்தால் போதும். பயிற்சியின்போது மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு விடுதி வசதி உண்டு. பயிற்சி டிசம்பர் முதல் தொடங்கப்படும்.

பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் இவ்வலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது கடிதம் மூலமாக இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். www.coirboard.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்ப்பட்ட விண்ணப்ப படிவங்கள் வரும் நவம்பர் 20ம் தேதிக்குள் வளர்ச்சி அலுவலர், மண்டல விரிவாக்க மையம், பிள்ளையார் பட்டி, வல்லம், தஞ்சை என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். கூடுதல் தகவல் அறிய 04362 264655 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.