.

Pages

Friday, October 28, 2016

அதிரை பேருந்து நிலையத்தில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி பங்கேற்பு ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-28
இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முனைப்பு காட்டும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மனிதநேய ஜனநாயகக் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் கிளை சார்பில் இன்று வெள்ளிக்கிழமை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் செயலர் முஹம்மது செல்லராஜா தலைமை வகித்தார். இதில் மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநில பொதுச்செயலரும், நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமாகிய எம். தமீமுன் அன்சாரி எம்எல்.ஏ கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஃப்ஐ ஆதரவு:
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பட்டுக்கோட்டை டிவிசன் தலைவர் வழக்கறிஞர் நிஜாம் தலைமையில் அவ்வமைப்பினர் பலர் கலந்துகொண்டார்கள்.

ஆர்ப்பாட்ட முடிவில் மாநில செயலர் நாச்சிகுளம் தாஜுதீன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பொதுசிவில் சட்டம் கொண்டு வர முனைப்பு காட்டும் மத்திய பாஜக அரசிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர்.

இதில் மஜக மாநில துணைச்பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, அக்கட்சியின் அதிரை பேரூர் பொருளாளர் சாகுல், துணைச் செயலர்கள் அபு பைதா, புரோஸ் கான், அப்துல் கனி உட்பட மஜகவினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 

3 comments:

  1. I'm very appreciated your movement dear bro

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. எங்களுக்கு ஒத்துழைப்பு தந்த சகோதரர் மான் சேக் அவர்களுக்கும் மற்றும் அதிரை நியூஸ் ஊடக துறைக்கும் , பாப்புலர் பிரண்ட் அமைப்பிற்கும் ,அல் அமீன் பள்ளி ஜமாத்தார்களுக்கும் ,தரகர்தெரு த.மா.க மைதீன் அவர்களுக்கும் மற்றும் இதை படிக்கும் வாசகர்களுக்கும் அதிரை மஜக சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் ஜஸாக்கல்லாஹ்ஹைர்...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.