.

Pages

Wednesday, October 26, 2016

இரண்டு முறை பிறந்த குழந்தை – ஓர் மருத்துவ அதிசயம் !

அதிரை நியூஸ்: அக்-26
இது காதில் பூச்சுற்றும் கதையல்ல, இது நவீன மருத்துவத்தால் சாத்தியமான நிஜம்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரின் குழந்தைகள் நல மருத்தவமனையிலேயே இந்த மருத்துவ அதிசயம் நிகழ்ந்துள்ளது. கருவுற்றிருந்த 16 வது வாரத்தில் மார்க்கரெட் போய்மர் என்பவர் தனது வழக்கமான மருத்துவ சோதனைகளுக்காக செல்ல, அங்கு அல்ட்ராசவுண்ட் சோதனையில் குழந்தையின் tailbone பகுதியில் சதைக்கட்டி ஒன்று வளர்வதை கண்டறிந்தனர்.

மருத்துவர்கள் ஒரு சிலர் குழந்தையை களைத்துவிடுவதே நல்லது என அறிவுரை வழங்க டாக்டர் ஒலுயிங்கா மட்டும் குழந்தை பிழைக்க 50 சதவிகிதமே வாய்ப்புள்ளது என்ற நிலையில் துணிந்து களத்தில் இறங்கினார்.

மார்க்கரெட் அவர்களின் 23 வது வாரத்தில் ஆபரேசன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டு 20 நிமிடத்தில் சதைக்கட்டி அகற்றப்பட்டு மீண்டும் தாயின் கர்ப்பப்பைக்கு உள்ளேயே மீண்டும் வைக்கப்பட்டது என்றாலும் இந்த ஆபரேசன் முழுமையாக நிறைவடைய 5 மணிநேரமாகியது. பின்பு மருத்துவமனையிலேயே மேலும் 12 வாரங்கள் தங்க வைக்கப்பட்ட தாய் 36 வார நிறைவில் மீண்டும் சிசேரியன் மூலம் குழந்தையை இரண்டாம் முறையாக பெற்றெடுத்தார்.

முதன்முறை வெளியே எடுக்கும் போது 538 கிராம் எடையே இருந்த அந்த பெண் குழந்தை மறுபிறப்பில் 2.4 கிலோ எடையுடன் பிறந்தது. sacrococcygeal teratoma எனப்படும் வாயில் நுழையாத விட்ட குறை தொட்ட குறை சதைக்கட்டியுடன் பிறந்த அந்த குழந்தையின் எஞ்சிய சதைக்கட்டியும் பிரசவத்திற்கு பின் அகற்றப்பட்டு 8 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பின் தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவரீதியாக 2 முறை பிறந்த குழந்தை 'லின்லீ போய்மர்' (Lynlee Boemer) தான் வளர்ந்த பின் தன் பிறப்பு வரலாற்றை அறிய வரும் போது அடைய இருக்கும் மகிழ்ச்சியை நினைத்து பெற்றோரும் உற்றாரும் தற்போதே பூரிப்படைந்துள்ளனர்.

Source: news.com.au & Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 

3 comments:

  1. அல்லாஹ் அக்பர்

    ReplyDelete
  2. அல்லாஹ் அக்பர்

    ReplyDelete
  3. மருத்துவமனையிலேயே மேலும் 12 வாரங்கள் தங்க வைக்கப்பட்ட தாய் 36 மாத நிறைவில் மீண்டும் சிசேரியன்

    36 வாரம் என்று மாற்றவும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.