தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை, சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியோர் இணைந்து 'கபிலரின் ஆளுமையும் படைப்பாற்றலும்' என்ற பெயரில் ஒரு நாள் கருத்தரங்கம் நிகழ்ச்சி திங்கட்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
நிகழ்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம். உதுமான் முகையதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முன்னாள் பதிவாளர் முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில்; சங்க இலக்கியத்தில் விலங்குகளுக்கு இருந்த நேயம், தற்போது மனிதனுக்கு இல்லை. சங்க இலக்கியம் மனிதனுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்துவருகிறது. சங்க இலக்கியப்புலவர் கபிலர் மனிதத்துவம், சகோதரத்துவம், சமத்துவம் என்ற 3 நிலைகளில் தன்னுடைய படைப்புகளை உருவாக்கி சிறந்த நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்துள்ளார். இந்நில உலகத்தில் அதியமான், ஒளவைக்கு பிறகு சிறந்த நட்புக்கு இலக்கணமாக கபிலர் - பாரி ஆகியோர் இருந்தனர். இவர்களுக்கு ஈடு இணை இல்லை' என்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் துல்கருணை, கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் ஏ.முஹம்மது முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தொடக்கத்தில் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் வரவேற்றார். முடிவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அ. கலீல் ரஹ்மான் நன்றி கூறினார்.
பின்னர் இரண்டு கருத்தரங்க அமர்வு நடைபெற்றது. முதல் அமர்விற்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் பா. மதிவாணன் தலைமை வகித்தார். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தமிழ்த்துறை தலைவர் எம்.ஏ.எஸ் ஹபீபுர் ரஹ்மான, ஒரத்தநாடு பாரதிதாசன் மகளிர் உறுப்புக்கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் கு.ப சரளா ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.
இரண்டாம் அமர்விற்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் முனைவர் ஆ. ஆலிஸ் தலைமை வகித்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக தமிழ்த்துறை தலைவர் முனைவர் உ. அலிபாபா, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் அ.கலீல் ரஹ்மான் ஆகியோர் ஆய்வுக்கட்டுரைகள் சமர்பித்தனர்.
இதன்பின்னர் கருத்தரங்கம் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். இதில் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் அ.கலீல் ரஹ்மான் நிறைவு உரை நிகழ்த்தினார்.
முன்னதாக கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை எஸ். சாபிரா பேகம் வரவேற்றார். முடிவில் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை மு. விஜயவாள் நன்றி கூறினார்.
இவ்விழாவில் தமிழ் அறிஞர்கள், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.