.

Pages

Wednesday, October 19, 2016

துபாய் நிஸ்ஸான் கார்களில் ஆபத்து கால SOS சமிக்ஞை கருவிகள் பொருத்தப்படும் !

அதிரை நியூஸ்: துபாய், அக்-19
துபையில் நடைபெற்று வரும் ஜீடெக்ஸ் டெக்னாலஜி வீக் கண்காட்சியில் பல்வேறு புதிய கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக வாகன விபத்து ஏற்படும் போது போலீஸ், ஆம்புலன்ஸ் போன்ற அவசர உதவிகளுக்காக தானியங்கி சமிக்ஞை அனுப்பும் SOS கருவிகள் ஆரம்பமாக நிஸ்ஸான் பேட்ரோல் (Patrol) மற்றும் மேக்ஸிமா (Maxima) வகை கார்களில் பொருத்தப்படவுள்ளதாக துபை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SOS என்று அழைக்கப்படும் இந்த கருவிகளுக்கு இதுதான் விரிவாக்க அர்த்தம் என இல்லாவிட்டாலும் உலகளவில் 'Save Our Soul', 'Save Our Ship', Send Out Succour' என பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த கருவிகள் வாகன விபத்து நேர்ந்தவுடன் 5வது நொடியில் வாகன விபத்துக்குள்ளாகியுள்ள இடம், வாகனம் சென்ற வேகம் போன்ற தகவல்களை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தானே தெரிவிக்கும் என்றாலும் வாய்ப்புள்ள நிலையில் போலீஸார் ஏற்பட்டுள்ள விபத்து சிறிய அளவிலானதா அல்லது மிக மோசமானதா என ஒட்டுனரை மொபைலில் அழைத்து விசாரிக்கவும் முயல்வர்.

குறிப்பு: ஏன் நிஸ்ஸான் கார்களுக்கு மட்டும் பொருத்தப்படுகின்றன என்பது குறித்து தகவல் இல்லை.

Source: 7 Days / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.