.

Pages

Tuesday, November 22, 2016

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் !

அதிரை நியூஸ்: துபாய், நவ-22
கடந்த 2 ஆண்டுகளாக பெரும் பின்னடைவை சந்தித்து வந்த கச்சா எண்ணெய் விலையில் மிகச்சிறிதளவு ஏற்றம் கண்டுள்ளது. மேலும் இந்த மாத இறுதிக்கள் பேரல் ஒன்று 50 டாலருக்கு விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் அல்ஜீரியாவில் நடைபெற்ற பெட்ரோல் உற்பத்தி கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் தீர்மானித்தபடி, நாளொன்றுக்கு 33.64 பில்லியன் பேரல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெய் 32.5 இருந்து 33 பில்லியன் பேரல்கள் என உற்பத்தி குறைக்கப்பட்டதால் தற்போது சர்வதேச மார்க்கெட்டில் பேரல் ஒன்று 49.23 டாலருக்கு விற்பனையாகிக் கொண்டுள்ளது அதாவது 0.67 டாலர் (சென்ட்) உயர்ந்துள்ளது.

அதேவேளை, அமெரிக்க சந்தையில் பேரல் ஒன்று 0.70 சென்ட்டுகள் ஏற்றம் கண்டு 48.58 டாலர் என விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஆஸ்திரியா தலைநகர் வியன்னா நகரில் பெட்ரோல் உற்பத்தி கூட்டமைப்பு நாடுகளின் அடுத்த மாநாடு நடைபெறவுள்ள நிலையில், பெட்ரோலிய உற்பத்தி குறைப்புக்கு மறுத்த ஈரான், ஈராக் போன்ற நாடுகளும் சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உற்பத்தி குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது. நம்ம இந்திய அரசு சும்மாவே விலையை ஏற்றும் இதில் சலங்கையை வேறு கட்டிவிட்டால்... உஷாராகி கொள்ளுங்கள் இந்தியர்களே! என்னாதூ!!!!... கையில பணம் காசு பொழக்கமில்லையா!!!!!!!

Source: Gulf news
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.