அதிரை நியூஸ்: பஹ்ரைன், நவ-22
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், கத்தர் மற்றும் பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகள் வளைகுடா நாடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகளில் பணிநிமித்தமாக ரெஸிடென்ட் விசா அனுமதியில் வசிக்கும் 114 சர்வதேச நாடுகளைச் சேர்ந்தோர் இனி ஈ-விசா (e-visa) எனும் முறையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பஹ்ரைன் விசாவை பெற்று எளிதாக சென்று தங்கலாம்.
1. சிங்கிள் என்ட்ரி (Single Entry) எனப்படும் ஒரு முறை பயண விசா அனுமதி மூலம் இனி 2 வாரங்கள் (14 நாட்கள்) வரை பஹ்ரைனில் தங்கலாம்.
2. மல்டிபிள் என்ட்ரி (1 Year Multiple Entry) எனப்படும் 1 வருட விசா பன்முறை அனுமதி மூலம் 90 நாட்கள் வரை தொடர்ந்து தங்கலாம், இதுவே முன்பு 30 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
3. 3 மாத மல்டிபிள் என்ட்ரி (3 Month Multiple Entry) எனப்படும் பன்முறை மறுஅனுமதி (Re-Entry) விசா மூலம் 30 நாட்கள் வரை தொடர்ந்து தங்கலாம், இதுவே முன்பு 2 வாரங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
4. 5 வருட மல்டிபிள் என்ட்ரி விசா (5 Year Multiple Entry) அனுமதி மூலம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய தேசத்தவர்கள் மட்டும் 90 நாட்கள் தொடர்ந்து தங்கலாம், இதுவே முன்பு 30 நாட்கள் வரையே அனுமதிக்கப்பட்டது.
சென்ற வருடம் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளிலிருந்து 315,943 பேர்களும், அமெரிக்காவிலிருந்து 256,439 பேர்களும், கனடாவிலிருந்து 79,127 பேர்களும் வருகை தந்ததையொட்டி இந்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சலுகைகள் மூலம் வர்த்தகம், சுற்றுலா ஆகிய துறைகள் வளர்ச்சி பெறுவதுடன் மத்திய கிழக்கின் முக்கிய தலமாகவும் பஹ்ரைன் உருவெடுக்கும் என நம்புவதாகவும் The Nationality, Passports & Residence Affairs (NPRA) அறிவித்துள்ளது.
புதிய விசா சலுகை வழங்கப்பட்டுள்ள 114 நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று. எனினும், வளைகுடா நாடுகளில் ஏதாவது ஒன்றின் செல்லுபடியாகும் ரெஸிடென்ட் விசாவில் (Valid Residence Visa) வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
ஆன்லைன் மூலம் விசாவுக்கு விண்ணப்பிக்க இந்தத் தொடுப்பினுள் செல்லவும்.
www.evisa.gov.bh
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.