.

Pages

Thursday, November 24, 2016

அல் அய்னில் 3 குழந்தைகள் கிணற்றுக்குள் தவறி விழுந்து மரணம் !

அதிரை நியூஸ்: நவ-24
அமீரகம், அல் அய்ன் நகரில் 2 வீடுகளைச் சேர்ந்த சுமார் 3 வயது முதல் 4 வயது வரை உள்ள அமீரக குழந்தைகள் நால்வர் பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். வீட்டின் கொல்லைப்புறத்தில் ஓடிய பூனையை துரத்தியபோது தவறுதலாக கிணற்றுக்கு மேல் போடப்பட்டிருந்த பலகை மீது ஓட, வலுவிழந்திருந்த பலகை எடை தாங்காமல் விழுந்து நொறுங்கியது.

கிணற்றை மூடியிருந்த பலகை உடைந்ததை தொடர்ந்து குழந்தைகள் 4 பேரும் கிணற்று நீரில் விழுந்து மூழ்க, சம்பவ இடத்திலேயே 3 குழந்தைகள் மரணமடைந்தனர். ஒரு குழந்தை மட்டும் பலத்த காயங்களுடன் தீயணைப்பு துறை வீரர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அல்லாஹ் குழந்தைகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு மன ஆறுதலை தந்தருள்வானாக!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.