.

Pages

Wednesday, November 23, 2016

வெள்ளையன் சொன்ன பொய்யால் 40 வருடங்களை இழந்த 2 அமெரிக்கர்கள் !

அதிரை நியூஸ்: நவ-23
1973 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சவுத் கரோலினா பகுதியில் நடைபெற்ற ஒரு கொள்ளை சம்பவத்தில் 3 நண்பர்கள் அதாவது கூட்டுக் களவாணிகள் கைது செய்யப்படுகின்றனர். இந்தக் கொள்ளை சம்பவம் நடைபெறுவதற்கு 2 வாரங்களுக்கு முன் 73 வயது நபர் ஒருவர் கொல்லப்படுகிறார்.

இந்த கொலை சம்பவத்திற்கும் இவர்களுக்கும் எத்தகைய தொடர்பு இல்லையென்றாலும் போலீஸ் திரைக்கதை எழுதுகிறது, 3 களவாணி நண்பர்களின் ஒருவர் திரைக்கதைக்கு ஏற்ப 'அப்ரூவர்' ஆகி விடுதலையாகிறார் ஆனால் மற்ற 2 கருப்பின நண்பர்களும் 'போலீஸால் நீரூபிக்கப்பட்ட கொலை குற்றத்திற்காக' 1977 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பிற்கு பின் சிறைக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், அப்ரூவர் நண்பன் 1992 ஆம் ஆண்டு இன்னொரு கொலை குற்றத்திற்காக சிறைபட்டிருந்த நிலையில் மரணமடைகின்றார் என்றாலும் சாகும் முன் தமிழ் சினிமா கிளைமாக்ஸ் சீன் பாணியில் தான் பொய் சொல்லியதை, போலீஸின் பொய் சாட்சியாக மாறிய உண்மையை சொல்லிவிட்டு இறந்து போகின்றார், இந்த செய்தியை அப்போது வெளிவந்த பத்திரிக்கைகள் பரபரப்பாக வெளியிட்டு விட்டு அடுத்த பரபரப்பு செய்தியை தேடிச் சென்றுவிட்டன.

நீதிபதியும் செத்த நண்பனின் மரண வாக்குமூலத்தை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்கிறார். மீண்டும் 2015 ஆம் ஆண்டு சிறையிலிருக்கும் நண்பர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று நகர ஷெரீஃப் (மாநகர கமிஷனர் மாதிரியான பொறுப்பு) மறுவிசாரணைக்கு உத்தரவிட, புலன் விசாரணையில் உண்மைகள் வெளிவர தற்போது 2 நண்பர்களில் ஒருவர் மட்டும் 'ஜாமீனில்' விடுதலை செய்யப்பட்டுள்ளார், இன்னொருவர் இன்னும் உள்ளே.

கிட்டதட்ட 40 வருடங்களாக சிறையிலிருக்கும் 2 நண்பர்களை நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ள நிலை, ஷெரீஃப் அன்டர்வுட் அவர்களும் 'நிரந்தர விடுதலை' அவர்களின் உரிமை என ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 40 ஆண்டு வாழ்க்கையை, இளமையை இழந்துவிட்டு 61 வது வயதில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள 'மெக் கிளர்க்கின்; என்ற அந்த நபரிடம் 1977 ஆண்டு என்ன தான் நடந்தது என வினவ, போலீஸ், வக்கீல், நீதிபதி என எல்லோரும் வெள்ளையர்கள் நான் கருப்பன் என நெத்தியடியாய் பதிலளித்துள்ளார்.

அனைத்து ஜனநாயக நாடுகளிலும் போலீஸூம், நீதித்துறையும் ஒன்று தான் போல! வாழ்க அமெரிக்கா ஜனநாயகம்!!

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.