.

Pages

Tuesday, November 29, 2016

புற்றுநோய் பாதிப்படைந்தவருக்கு TNTJ அதிரை கிளை மருத்துவ நிதி உதவி !

அதிராம்பட்டினம், நவ-29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசிப்பவர் மீராஷா ( 45 ). அதிராம்பட்டினம் பகுதிகளில் சுண்டல் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ரம்ஜான் பேகம் என்ற மனைவியும், 10 ம் வகுப்பு கல்வி பயிலும் 15 வயது மகள் மற்றும் 4 ம் வகுப்பு கல்வி பயிலும் 10 வயது மகள் என 2 பேர் உள்ளனர்.

கடந்த 2014 ம் ஆண்டில் மூக்கில் கட்டி ஏற்பட்டு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. இதன் பின்னர் இம்மருத்துவமனையில் தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நிலையில், முகத்தின் தாடை பகுதியில் மீண்டும் கட்டி ஏற்பட்டு அறுவை சிகிச்சை மூலம் தாடை அகற்றப்பட்டன. இதனால் இவரது முழுமையாக பேசும் திறன் குறைந்துவிட்டது. மேலும் இவரது இடது கண் முற்றிலும் செயல் இழந்துவிட்டன. கண்ணாடி அணிந்துபடி வெளியே சென்று வருகிறார். கடந்த 1- 1/2 ஆண்டுகளாக சுண்டல் வியாபாரத்தை நிறுத்திவிட்டார்.

தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் மிகவும் ஏழ்மை நிலையில் நாட்களை கடத்தி வருகிறார். போதிய நிதி வசதி இல்லாததால் மருத்துவர் அறிவுரையின் படி மாதத்திற்கு இரண்டு முறை மருத்துவ சிகிச்சை தொடர முடியாமல் தவித்து வருகிறார். மேலும் இவர்களது அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்தது.

புற்றுநோய் பாதிப்பில் உயிருக்கு போராடி வரும் மீராஷா அவர்களின் மருத்துவ தொடர் சிகிச்சை மற்றும் அன்றாட வாழ்வாதார உதவிக்காக இக்குடும்பத்தினர் நிதி உதவி கோரி இருந்தனர்.

இதையடுத்து பல்வேறு கொடையாளர்கள் வங்கி கணக்கின் வழியாகவும், நேரடியாகவும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில் அதன் தலைவர் எம்.கே.எம் ஜமால் முகமது ரூ 20 ஆயிரம் மருத்துவ நிதி உதவியை மீராஷாவிடம் வழங்கினர். அப்போது கிளைப் பொருளாளர் அல்லா பிச்சை மற்றும் சமூக ஆர்வலர்கள் அன்வர், ஜமால் முகம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.

குறிப்பு: மிகவும் நலிவுற்றிருக்கும் இவரது குடும்பத்திற்கு பிறரும் உதவ வேண்டும் என்ற நோக்கத்திற்காக இச்செய்தி பதிவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.