3 ஆண்டுகளுக்கு முன், 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவி ஸஹ்ரா ஜாபர் அலி அவர்கள் வசம் கல்வி, விளையாட்டு என பன்முகத் திறமைக்கான சான்றிதழ்கள், கேடயங்கள், கோப்பைகள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் குவிந்திருந்தன கூடவே ஏழ்மையான தனது தாய் "வீட்டு பணியாளர்" என்பதால் படிப்பை தொடர்வதில் நிச்சயமற்ற நிலையுடன் ரெஸிடென்ஸி விசா பிரச்சனை.
திறமையான மாணவி ஸஹ்ரா குறித்து கல்ஃப் நியூஸின் எக்ஸ்பிரஸ் (Gulf News Xpress) இணைப்பில் செய்தி வெளியாக, முழுமையான கல்வி உதவியுடன் (Fully Sponsored) தகவல் தொழிற்நுட்ப (Information Technology - IT) மாணவியாக சேர்த்துக் கொள்கின்றது துபையில் இயங்கும் முர்டோக் பல்கலைக்கழகம் (Murdoch University). அதன்பின் கடந்த 3 வருடங்களாக கல்லூரிக்கு விடுமுறையே எடுக்காத, காலையில் 9 மணிக்கு கல்லூரிக்கு வரும் ஸஹ்ராவுக்கு 6 மணிவரை கல்லூரியே கதியென கடும் உழைப்பு.
விளைவு, இன்று தகவல் தொழிற்நுட்பப் பாடப் பிரிவில் 2 முதன்மை பாடங்களில் உயர்ந்த ஸ்தானத்துடன் தேர்வாகி பட்டம் பெற்றும் (Double Graduated with Distinction in 2 Majors), பல்கலைக் கழக துணை வேந்தரின் கல்வியில் சிறந்து விளங்குவோருக்கான சிறப்பு விருதும் (Vice Chancellor’s award for academic excellence in Information Technology (IT). ஒருசேர பெற்றதால், கல்வியில் அவரது அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டியும் தான் பயின்ற முர்டோக் பல்கலைக் கழகத்திலேயே விரிவுரையாளராக பணி வழங்கப்பட்டுள்ளார்.
இளம் வயதிலேயே, இளநிலை பட்டதாரியாக இருக்கும் நிலையில் தகவல் தொழிற்நுட்ப பிரிவின் அடிப்படை மாணவர்களுக்கு (Teaching foundation students) பாடம் நடத்தும் முழுநேர விரிவுரையாளராக (Full Time Job as Lecturer) பணி நியமனம் பெற்றிருப்பதால் கல்விச்சேவையுடன் இனி அவரால் எளிதாக மேற்படிப்பும் படிக்க இயலும், தனது தாய்க்கும் சேர்த்து ரெஸிடென்ஸ் விசா ஸ்பான்சர் செய்ய முடியும், தனது சகோதரனை கல்லூரியில் படிக்க வைக்க இயலும் மேலும் தனது குடும்பத்திற்காக செலவிட முடியும் என பெருமிதம் கொள்கிறார் என்றாலும் இவை அத்தனைக்கும் பின்னே அல்லாஹ்வின் அருளால் அவரது கல்வியின் மேல் காதலும், புத்திசாலித்தனமும், இடைவிடா முயற்சியுமே காரணம்.
மேலும் முன்னேற நமது சகோதரியை நாமும் வாழ்த்துவோம், அல்லாஹ் உங்கள் மீது மென்மேலும் அருள்புரிவானாக!
Source: Gulf News Xpress
தமிழில்: நம்ம ஊரான்
This comment has been removed by the author.
ReplyDeleteMAA SHAA ALLAH
ReplyDeleteALL PRAISE BE TO ALLAH
congrats
ReplyDelete