தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாள்களாக அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுக்க முடியாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கி மற்றும் ஏடிஎம்களில் கூட்டம் அலைமோதி வருகின்றன. பணத் தட்டுப்பாடு நீடிப்பதால், பெரும்பாலான வங்கிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
அதிராம்பட்டினத்தில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் பணம் எடுப்பதற்கும், ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கியில் செலுத்துவதற்கும் பொதுமக்கள் நாள் முழுக்க வங்கி வாசலில் நிற்கின்றனர்.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை அதிரை ஈசிஆர் சாலையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி வாசலில் காத்திருந்த பொதுமக்களிடம், வங்கியில் பணம் இல்லை என வங்கி தரப்பில் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த, அதிராம்பட்டினம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, வங்கி அதிகாரிகள் 150 பேருக்கு ரூ 4000 வீதம் இன்று வெள்ளிக்கிழமை பணம் வழங்கினர். மீதமுள்ள 350 பேருக்கு டோக்கன் வழங்கி வரும் திங்கள்கிழமை பணம் பெற்றுச்செல்ல அறிவுறுத்தினர். இதன்பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
ஒரு டவ்ட் அதிரை நீவ்சுக்கும் கனரா வங்கிக்கும் நெருக்கம் அதிகமோ ஒரு இடத்தில் கூட கனராபேன்ங்கின் பெயர் இடம்பெரவில்லை கனரா பேங்கின் முகப்பு பெயர் பலகயின் புகைப்படமும் இல்லை காரனம் என்ன அதிரை நீவ்ஸ் கன்டிப்பாக பதில் சொல்லவும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுக்கியமான கேள்வி இந்த நேரத்துல. பதில சொல்லுங்கப்பா இவருக்கு.... இல்லாட்டி விபரிதமாகிவிடும்
Deleteஅடிப்பட்டதும் அடிமைப்பட்டதும் வஞ்சிக்கப்பட்டதும் போதும் !
ReplyDeleteஅடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராக வீறுகொண்டு வெகுண்டெழு சமுதாயமே !!
போராடாத சமுதாயம் வரலாறு படைக்க முடியாது !!!