.

Pages

Wednesday, November 30, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் திறப்பு ( படங்கள் )

அதிராம்பட்டினம், நவ-30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் புதிய நூலகக் கட்டிடத்தை இன்று ( 30-11-2016 ) புதன்கிழமை காலை கல்லூரி நிர்வாகி நீதிபதி கே.சம்பத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் காதிர் முகைதீன் கல்வி நிறுவன அதிகாரப்பூர்வ கையொப்பமாளர் முனைவர் ஏ.ஜலால், கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம். உதுமான் முகையதீன், கல்லூரி நூலகர் தினகரன் பொன்னையா மற்றும் அனைத்து துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த புதிய நூலக கட்டிடம் சுமார் ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், 50க்கும் மேற்பட்ட பருவ இதழ்கள், மாணவ, மாணவிகளுக்கு படிப்பதற்கு தேவையான அனைத்து புத்தகங்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் நூல்கள், மின் இதழ்கள் தவிர இணையதள வசதி ஆகியன நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்நூலகத்தில் படிப்பதற்காக மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக இடவசதியும், பேராசிரியர்களுக்கு தனியாகவும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த புதிய நூலகம் எவர்டெக் பில்டர் நிறுவன கான்டிராக்டர் ஏ. சாகுல் ஹமீது மூலம் கட்டப்பட்டுள்ளது.
 

 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.