அதிரை நியூஸ்: துபாய், நவ-20
பர்துபை மற்றும் தேரா துபை பகுதிகளை சாலை மார்க்கமாக இணைக்கும் துபையின் முக்கிய போக்குவரத்து சாலையாகவும், சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் கடலடி சுரங்கவழிப் பாதையாகவும் கடந்த 40 ஆண்டுகளாக சேவையாற்றி வருகின்ற 'ஷிண்டாகா டனல்' எனும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சுரங்கவழி சாலைக்கு பதிலாக கடலுக்கு மேல் 12 வழிகளுடன் பிரமாண்ட பாலம் அமையவுள்ளது. இந்தப் பாலம் அல் மம்ஸரிலிருந்து கராமா பகுதி வரை அமையவுள்ள 'ஷிண்டாகா கோரிடர்' எனும் 13 கி.மீ. விரைவு சுற்றுச்சாலையின் (Express Ring Road) ஒரு பகுதியாகவும் அமையவுள்ளது.
இந்த கடலடி ஷிண்டாகா சுரங்கப்பாதையின் ஆயுட்காலம் 50 என மதிப்பட்டுள்ளது என்றாலும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்தால் இன்னும் 20 ஆண்டுகளுக்கு இந்த கடலடி சாலை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டு முதல் காலண்டு பகுதியில் துவங்கவுள்ள இந்தப்பணிகள் 3 கட்டங்களாக நடைபெறவுள்ளன. சுமார் 300 மீட்டர் நீளத்திலும் 22 மீட்டர் அகலத்திலும் கட்டப்படவுள்ள இந்தப் பாலம், கடல் போக்குவரத்தை பாதிக்காத வகையில் 15 மீட்டர் உயரத்தில் எழுப்பப்படவுள்ளது.
தற்போது புறத்திற்கு 2 வழிப்பாதையாகவுள்ள தினசரி சராசரியாக 1 லட்சம் வாகனங்கள் கடந்துசெல்லும் இந்த சுரங்கப்பாதையில் மாலை வேளைகளில் மணிக்கணக்கில் வாகன ஒட்டிகளும் இதர பயணிகளும் நெடுநேரம் காத்திருக்க வேண்டிய அவலம் நிலவுகிறது.
2017 ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ள முதற்கட்ட வேலைகள் 611 மில்லியன் திர்ஹம் செலவிலும், இரண்டாம் கட்டப்பணிகள் 3.8 பில்லியன் திர்ஹம் செலவிலும், இறுதி மூன்றாம் கட்டப்பணிகள் 668 மில்லியன் திர்ஹம் செலவிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த 13 கி.மீ. அதிவேக சாலைகள் விரிவுபடுத்தப்படுவதுடன், புதிய மேம்பாலங்கள், சுமார் 15 இன்டர்செக்ஷன்கள், புதிய துணைச்சாலைகள் (Local Roads), புதிய சர்வீஸ் ரோடுகள், நடைபாலங்கள் என புதிய பரிணாமம் அடையவுள்ளன.
தகவலுக்காக... வரலாற்றுத் குறிப்பு ஒன்று:
இந்த ஷிண்டாகா கடலடி சுரங்கவழிப்பாதையை Halcrow எனும் நிறுவனத்தின் மூலம் 1970 ஆம் ஆண்டு துவங்கி 1975 ஆண்டு கட்டி முடித்தவர் முஹமது பயாத் எனும் எகிப்தியர். இவருடைய மகன் டோடி பயாத் என்பவரே பிரிட்டன் இளவரசி டயானாவுடன் காரில் பயணிக்கும் போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் Pont de l'Alma (Alma Bridge in English) எனும் சுரங்கவழிச்சாலையில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய வாகன விபத்தில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி இறந்தார்.
புகைப்பட விளக்கம்:
1975 ஆம் ஆண்டு துபையில் இயங்கி வாகனங்கள் ஷிண்டாகா சுரங்கப்பாதை வழியாக பயணித்த போது எடுத்த புகைப்படம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.