.

Pages

Monday, November 21, 2016

சவுதி அரசு 40 பில்லியன் ரியால் நிலுவைத்தொகை கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கியது !

அதிரை நியூஸ்: சவூதி அரேபியா, நவ-21
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு ஏற்பட்ட விலை வீழ்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு சவுதி அரேபியா, இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களே. இவர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் சம்பளம், உணவு, இருப்பிடம் வழங்க இயலாமலும் தத்தளித்தனர். பல்லாயிரக்கணக்கனோர் வேலையிழந்து நாடு திரும்பினர்.

இந்நிலையில், சவுதி அரசு மேற்கொண்ட மாற்றுப் பொருளாதார மீட்பு நடவடிக்கையின் வாயிலாக முன்னேற்றம் அடைந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் எதிர்வரும் 2016 டிசம்பருக்குள் நிலுவை தொகைகள் அனைத்தும் படிப்படியாக கொடுக்கப்படும் என அறிவித்து சென்ற மாதமே குறிப்பிட்டளவு கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கியது, இதன் மூலம் பல தொழிலாளர்கள் தங்களது நீண்டகால நிலுவை சம்பளத்தை பெற முடிந்தது.

தற்போது கட்டுமான துறையில் ஈடுபட்டிருந்த ஜெர்மனி, துருக்கி, ஸ்பெயின் மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு சுமார் 40 மில்லியன் ரியால் தொகையை விடுவித்துள்ளது. மேலும் வரும் வாரங்களில் சுமார் 100 மில்லியன் ரியால்கள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் எஞ்சிய நிலுவை தொகைகளும் விரைவில் வழங்கப்படவுள்ளன என்றும் அரப் நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.