.

Pages

Saturday, November 26, 2016

ஸலாலா விமான நிலையத்தில் விபத்திலிருந்து தப்பியது ஓமன் ஏர் !

அதிரை நியூஸ்: நவ-26
சமீபகாலமாக சிறிதும், பெரிதுமான பல விமான விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. அதன் வரிசையில் நேற்று வெள்ளிக்கிழமை ஸலாலா விமான நிலையத்தில் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த ஓமன் ஏர் விமானத்தின் டயர் வெடித்து சிதறியது.

இந்த சம்பவம் விமானம் புறப்படுவதற்காக ரன்வேயில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்தாலும் விமானம் மேலே எழும்பும் முன் நிகழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், ரன்வேயில் கிடந்த ஏதோ ஒரு மர்மப் பொருளின் மீது மோதியதாலேயே டயர் வெடிப்பு நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது, விமானம் உடனடியாக ரன்வேயிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விமான போக்குவரத்து சீரடைந்தது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.