.

Pages

Monday, November 21, 2016

பொதுசிவில் சட்ட கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சம்சுல் இஸ்லாம் சங்கம் அழைப்பு !

அதிராம்பட்டினம், நவ-21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைபெற உள்ள பொதுசிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் திரளாக கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டது.

சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அவ்வமைப்பின் இளைஞர் அமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் சங்க அலுவலகத்தில் இன்று ( திங்கள்கிழமை ) காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹசன் ஹாஜியார் தலைமை வகித்தார். ஏ.ஏ.எம்.எஃப் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ் சிஹாபுதீன், பொருளாளர் ஜலீல், துணைச்செயலர் நாவலர் நூர் முஹம்மது, சங்க இளைஞர் அமைப்பின் தலைவர் அகமது அனஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வர முனைப்பு காட்டும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 26-11-2016 அன்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கும்பகோணத்தில் ஜமாத்துல் உலமா சபை சார்பில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் மஹல்லாவாசிகள் திரளாக கலந்துகொள்வது எனவும், இதற்காக வாகனங்கள் ஏற்பாட்டிற்கு எல்லா பள்ளிவாசல்களிலும் அறிவிப்பு செய்வது எனவும், மஹல்லாவாசிகள் அனைவரும் தங்களது பெயரினை முன்கூட்டியே மஹல்லா பள்ளிவாசல்களில் பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், சங்க இளைஞர் அமைப்பு நிர்வாகிகள், பள்ளிவாசல்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 
 

1 comment:

  1. மாஷா அல்லாஹ்! நல்ல விஷயம் தான். இதே போல ஷரியத் முறைப்படி உலமாக்கள் முன்னிளைலே அதிரைலே தலாக் விஷயத்துக்கு எல்லாரும் ஒன்று கூடி நல்ல முடிவு எடுத்தா! இன்னும் சிறப்பா இருக்கும்.

    பொது சிவில் சட்டம் என்னும் தோற்றமே நம்முடைய சமுதாயத்துலே ஷரியத் முறைலே தலாக் நடக்கவில்லை என்ற புகாரின் பேரில் அமைந்த ஒன்று என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதை நினைவுறுத்துகிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.