இருப்பு ஒன்றின்
இலையும் சருகும்
என்றாலும்
இருந்த உறவில்
இழப்பு அலறல்
மறுப்பும் முளைக்கும்
பதறலால்...
பார்வைகள் பலவிதம்
பார்ப்பவர் விதத்தில்
பழக்கத்தின் விளைவில்
அதனால்
வேதனை சமமில்லை
விருப்பத்திலும் இல்லை
விளங்கியோர் அமைதியில்
உலகியல்
விரலை ஒடிக்க
அலறல் அதிகம் !
பாவம் ஐந்தில் ஒரு விரல்...
பலகால்கள் ஊர்வன
பாதிப்பு அலறல் சிறு தூறல்
புற்றுநோய்க்கு பிறப்பில் மகிழ்ச்சி
வளர்ந்திடும் பொலிவில்
மற்றதற்கு துன்பம்தான் !
புயலால் இமாலயம் நிலைதடுமாறா...!
புல்லும் !
புத்திதடுமாற்றம் மரத்திற்கே !
பாவம் !
ஒட்டியவயிறோடு உருட்டிய ஐநூறுகள், ஆயிரங்கள் !...
கேட்கவும் பார்க்கவும் அச்சம்
பானையோடு சில்லாகுமோ ?!
கருப்பனுக்கும், நடிப்புக்கும் சங்குதான் !
ஆனாலும் பகல் முதலைக்கு
மீன்கள் உணவுதான்
இது செல்லாக் காசு சொல்லும் சேதி.
ஷேக் அப்துல்லாஹ் அ
அதிராம்பட்டினம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.