தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பு, தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து இலவச சிறப்பு மருத்துவ முகாம் அதிராம்பட்டினம் சாரா திருமண மகாலில் இன்று ( திங்கள்கிழமை ) நடைபெற்றது.
முகாமிற்கு லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சி இர்பான் சேக் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க செயலர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தனர்.
முகாமை லயன்ஸ் சங்க மண்டலச்செயலர் பேராசிரியர் செய்யது அகமது கபீர் தொடக்கி வைத்து பேசினார். முகாமில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 350 நோயாளிகளுக்கு தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் எடை ஆகியவை பரிசோதித்தனர். இதில் 20 பேருக்கு தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் இருதய நோய்க்கான உயர் சிகிச்சை அளிக்கவும், ஒருவருக்கு உதடு அன்னபிளவு அறுவை சிகிச்சை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டனர்.
முகாமில் 100 பேருக்கு ரூ. 200 மதிப்புள்ள இசிஜி இலவசமாக எடுக்கப்பட்டது. மேலும் இருதயம் மற்றும் சக்கரை நோய் சிறப்பு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டன.
இம்முகாமில் லயன்ஸ் சங்க வட்டாரத்தலைவர் அனந்த கிருஷ்ணன், மாவட்டத்தலைவர்கள் முஹம்மது முகைதீன், பேராசிரியர் மேஜர் டாக்டர் எஸ்.பி கணபதி, எஸ்.ஏ அப்துல் ஹமீது, பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், ஆஃப்ரின் நெய்னா முஹம்மது, சாரா அகமது, சாகுல் ஹமீது, செல்வராஜ், முன்னாள் உடனடித்தலைவர் ஆறுமுகச்சாமி, உறுப்பினர்கள் முத்துசாமி, கே. இத்ரீஸ் அகமது, அதிரை மைதீன், அப்துல் ரஹ்மான், நெய்னா முஹம்மது, நிஜாமுதீன், கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பின் மாவட்ட துணைத்தலைவர் அஹ்லன் கலீபா, அவ்வமைப்பின் அதிரை பேரூர் தலைவர் இப்ராஹீம் அலி, செயலாளர் ஹாஜா முகைதீன் மற்றும் காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மிக அருமை....சிறப்பான சேவை அனைவருக்கும் பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள்
ReplyDelete