.

Pages

Sunday, November 20, 2016

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு !

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குந்தவை நாச்சியார் அரசினர் கலைக்கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, தேர்தல் பொது பார்வையாளர் ஷேக் அகமது, ஆகியோர் வேட்பாளர்கள், வேட்பாளரின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்  பாதுகாப்பான அறையில் வைத்து  இன்று (20.11.2016) பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதி பதிவான வாக்குப்பெட்டிகள் அனைத்தும், பாதுகாப்பான முறையில் குந்தவை நாச்சியார் அரசினர்  கலைக்கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளரின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. 174 தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் 69.41 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

குந்தவை நாச்சியார் அரசினர் கலைக்கல்லூரியில் மூன்றாடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.  மேலும், சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. வருகின்ற 22.11.2016 காலை 8.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.  இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், தேர்தல் நடத்தும் அலுவலர் த.சுரேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம், உதவி ஆணையர் (கலால்) இன்னாசிமுத்து, தேர்தல் தனி வட்டாட்சியர் ராமலிங்கம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.