.

Pages

Saturday, November 5, 2016

குரூப்-4 தேர்வாளர்களுக்கு முக்கிய அறிவுரை !

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி - IV ( Group IV ) தேர்வுகள் 06-11-2016 அன்று “ஞாயிற்று கிழமை முற்பகல் மட்டும் தஞ்சாவூர். திருவையாறு. ஒரத்தநாடு. பூதலூர். கும்பகோணம். பாபநாசம். திருவிடைமருதூர். பட்டுக்கோட்டை. பேராவூரணி ஆகிய 9 வட்டங்களிலும் 99 தேர்வு மையங்களில் அமையப்பெற்ற 161 தேர்வு கூடங்களில் 47746 தேர்வாளர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

இத்தேர்வின் கண்காணிப்பிற்காக துணை ஆட்சியர் நிலையில் 30 பறக்கும்படை அலுவலர்கள். 39 இயங்குகுழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர் - உதவியாளர் நிலையில் தேர்வு கூட நடைமுறைகளை கண்காணித்திட 161 ஆய்வு கூட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்வு பாதுகாப்பு பணிக்கு காவலர் - ஆயுதம் ஏந்திய காவலர்களும் மாவட்டம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுத உள்ள தேர்வாளர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்கண்டவாறு  அறிவுரைகள்  வழங்கப்பட்டுள்ளது.

1. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண் - பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை இணைதள பக்கத்தில் உள்ளீடு செய்து. பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தை அதே இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.

2.  விண்ணப்பதாரர்கள் தங்களது கணினியில் பதிவிறக்கம் செய்யும் முன் பாப் அப் ப்ளாக் நிலையினை உபயோகப்படுத்தும் பட்சத்தில் அந்நிலையினை மாற்றி தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

3. விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவு சீட்டினை கண்டிப்பாக உடன் எடுத்து வர வேண்டும், தேர்வு கூடத்துக்குள் நுழையும் போதும். அறை கண்காணிப்பாளர் கேட்கும் போதும். காண்பிக்க வேண்டும்,

4. தேர்வு கூட நுழைவு சீட்டுடன் வரும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு கூட வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர், உடன் வரும் பெற்றேhர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.

5. அகவி. செல்போன். கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தவித மின்னனு சாதனங்களையும். விண்ணப்பதாரர் தேர்வுக்கூடத்திற்கு எடுத்து வரவோ. வைத்திருக்கவோ கண்டிப்பாக அனுமதி  கிடையாது, மீறி தேர்வுக் கூடத்தினுள் எந்த தேர்வரேனும் வைத்திருப்பது தெரியவரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.

6. தேர்வு மையத்தை - கூடத்தை மாற்றவோ. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டுள்ள விருப்பப்பாடத்தை மாற்றி எழுதவோ கண்டிப்பாக அனுமதியில்லை.

7. விண்ணப்பதாரர்களுக்கான தேர்வாணைய அறிவுரைகளை தேர்விற்கு வரும் முன் கவனமாகப் படித்துவிட்டு வரும்படி அறிவுறுத்தப்படுகிறhர்கள், தேர்வாணைய அறிவுரைகளை மீறும் விண்ணப்பதாரர்கள் மீது தேர்வாணைய அறிவுரைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8.  தேர்வாணையத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி மாவட்டம் முழுவதிலும் உள்ள தேர்வு கூடங்களில் உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, மேலும் தேர்வாளர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு தொடர்பான விளக்கங்களுக்காக  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்துக்கொள்ளப்படுகிறது,

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.