இந்தியன் சோசியல் ஃபோரம் பஹ்ரைன் மண்டல தமிழ் பிரிவு மற்றும் டிஸ்கவர் இஸ்லாம் தமிழ் பிரிவு இணைந்து நடத்திய “பொது சிவில் சட்டம்” ஏன்? எதற்கு? எனும் மாபெரும் பொதுக்கூட்டம் 04-11-2016 வெள்ளிக்கிழமை மாலை மைசூர் பவன் அரங்கில் வைத்து நடைபெற்றது.
இந்தியன் சோசியல் ஃபோரம் கிளைத்தலைவர் தவ்பீக் அவர்கள் வரவேற்புரையுடன் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்தியன் சோசியல் ஃபோரம் தமிழ் பிரிவு தலைவர் அப்துல்கரீம் தலைமை உரையாற்றினார்.
கூட்டத்தில் தாயகத்திலிருந்து வருகை தந்த சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் இந்தியன் சோசியல் ஃபோரம் தமிழ் பிரிவு தலைவர் அப்துல்கரீம்
டிஸ்கவர் இஸ்லாம் தமிழ் பிரிவின் தலைவர் முபாரக், பஹ்ரைன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வல்லம் பஷீர், கலைஞர் செம்மொழி பேரவை தலைவர் சாதிக், காயிதே மில்லத் பேரவை தலைவர் கவிமகன் காதர், அம்பேத்கர் மூவ்மென்ட் தலைவர் ராஜேஷ், பாரதி தமிழ் சங்கம் முன்னாள் தலைவர் அப்துல் கய்யூம், சமூக ஆர்வலர் தக்கலை கவுஸ் முகம்மது, நாம் தமிழர் கட்சி தலைவர் வேல்முருகன்
அல்ஹிதாயா தமிழ் தாவா தலைவர் தஸ்தகீர், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் ஜாண் முகம்மது, பஹ்ரைன் இந்தியன் ஃபிரடர்னிட்டி ஃபோரம் டெல்லி பிரிவு தலைவர் ஜவாத் பாஷா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினர் அப்துல் ஹமீது அவர்கள் தனது சிறப்புரையில், பொது சிவில் சட்டம் பற்றிய தெளிவான பார்வையையும், அதனால் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் மிகத்தெளிவாக எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் பஹ்ரைனில் இருக்கின்ற பல்வேறு அரசியல் அமைப்புகள், இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு பொதுசிவில் சட்ட எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்தனர்.
பாஜக அரசின் இரண்டாண்டு கால மோசமான ஆட்சியினால் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை மறைப்பதற்காகவும், மேலும் ஓட்டு வங்கியை தக்க வைப்பதற்காகவும் இந்த பொதுசிவில் சட்டம் எனும் நாடகத்தை கையில் எடுத்து, மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி வருவதாகவும் விளக்கிக்கூறினார்.
இறுதியாக அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இதுபோன்ற பல்வேறு தரப்பட்ட சமூகப் பிரச்சினைகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் கைகோர்த்து ஆதரவளிப்போம் என தெரிவித்துக் கொண்டனர்.
டிஸ்கவர் இஸ்லாம் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர் சகோதரர் அப்துல் ஹமீது அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
மூன்று மணிநேரம் நடைபெற்ற இச்சிறப்பு பொதுக்கூட்ட அரங்கை சுற்றி பொதுசிவில் சட்டம் குறித்த கேலிச்சித்திரங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. இதனை மக்கள் ஆர்வமாக கண்டு களித்தனர்.
இறுதியாக இந்தியன் சோசியல் ஃபோரம் பஹ்ரைன் மண்டல பொதுச்செயலாளர் சகோதரர். இப்ராஹீம் அவர்கள் தனது உரையில், கடல் கடந்து வாழ்ந்தாலும் நம் நாடு, நம் மக்கள், நானும் உங்களில் ஒருவன் எனும் உணர்வோடு இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்த்து நாட்டின் இறையாண்மையை காப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென கேட்டுக்கொண்டதோடு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
இந்தியன் சோசியல் போரம் தமிழ் பிரிவின் செயலாளர் அதாவுல்லா அவர்கள் மிகவும் நேர்த்தியாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.