பட்டுக்கோட்டை, நவ-06
பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் ஒரு அங்கமாகிய அறிவகம் மதரஸா சார்பில் குர்ஆன் மனனப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா பட்டுக்கோட்டை தனியார் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்சிக்கு அவ்வமைப்பின் பட்டுக்கோட்டை டிவிசன் தலைவர் வழக்கறிஞர் நிஜாம் தலைமை வகித்தார். அறிவகம் மதரஸா பயிற்சியாளர் அப்துல்லா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் குர்ஆன் மனனப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் 50 பேர் கலந்துகொண்டனர். போட்டிகளை பள்ளிவாசல் இமாம் யூசுப் ஹாஜியார், தையூப், அன்வர், சிராஜுதீன் ஆகியோர் நடத்தினார்கள். போட்டி முடிவில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசு இரண்டு கிராம் தங்க நாணயம், இரண்டாம் பரிசு சைக்கிள், மூன்றாம் பரிசு( இரண்டு நபர்களுக்கு) மிக்சி, ஃபேன், நான்காம் பரிசு காஸ் ஸ்டவ், ஐந்தாம் பரிசு குக்கர் வழங்கப்பட்டன.
இவற்றை விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட டாக்டர் சாகுல்ஹமீது, பைவ் ஸ்டார் அரஃபாத், டாக்டர் உமர், யூசுப் ஹாஜியார், பாரி ஹாஜியார் ஆகியோர் வழங்கினார்கள். மேலும் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவில் பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் உறுப்பினர் நிசார் அஹமது நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் ஹாஜா அலாவுதீன், எஸ்டிடியூ அணி மாவட்ட தலைவர் அமானுல்லா உட்பட அவ்வமைப்பினர், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் 200 பேர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.