இது காலப்போக்கில் பல முன்னேற்றங்கள், நவீனங்கள், ஊர் விரிவாக்கம் இப்படியான பல நிலைகளை கடந்து, அன்று (1995) 33/11கே.வி திறன் கொண்ட துணை மின் நிலையத்தை கொண்ட அந்தஸ்த்தை நமதூர் அடைந்து இருந்தது.
இந்த நிலை ஆரம்ப காலத்தில் போதுமானதாக இருந்தாலும், தற்போது நமதூரும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் வளர்ச்சி அடைந்ததோ இல்லையோ, வெகுவாக விரிவடைந்து விட்டது. வீட்டுக்கு வீடு நவீன மின் சாதனங்கள், மேலும் அடிக்கடி மின் துண்டிப்பு, மழை காலங்களில் உயர் மின் அழுத்த கம்பிகளில் (மதுக்கூர்-அதிரை 33கே.வி) பழுதுஏற்படுதல், இதன் காரணத்தினால் பல மணிநேரங்கள் மின்சாரம் தடைபடுதல் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ மாணவியர்கள், மருத்துவமனைகள், இன்னும் பலர் பலப்பல இன்னல்களுக்கு ஆளாகுகின்றனர்.
இவைகளை கருத்தில் கொண்டு மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கு அவ்வப்போது பல முறை கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
இதன் பலனாக நமதூருக்கு 110/33/11கே.வி திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க (SANCTION) அங்கீகாரம் கிடைத்து விட்டது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.
இந்த வசதியினால் எந்த அடை மழையானாலும் மின் தடை இருக்காது, நாம் இனிமேல் மதுக்கூர் துணை மின் நிலையத்தை எதிர்பார்க்க தேவை இல்லை, இந்த புதிய மின் நிலையம் சுதந்திரமாக இயங்கும், நமதூரிலிரிந்து மேலும் பல ஊர்களுக்கு மின்சாரம் பிரிந்து செல்லும், நமதூரில் லோ வோல்டேஜ் என்ற சொல்லுக்கே இடம் இருக்காது, மேலும் நமதூரில் உள்ள அனைத்து மின் கம்பங்களும் மின் கம்பிகளும் புதியதாக மாற்றி அமைக்கப்படும், மின் தடைக்கு வேலையே இல்லை, அதிரை நகரம் ஜொலிக்கும்.
பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, திருவாரூர் போன்ற துணை மின் நிலையங்கலைபோல் அதிரையும் திகழும்.
அதிரையில் தற்போது உள்ள துணை மின் நிலையம் இடம் இதற்க்கு போதுமானதாக இல்லை. அதற்கு பக்கத்திலோ அல்லது வேறு இடத்திலோ நிலம் பார்க்கப்பட்டு வருகின்றது, நான்கு அல்லது ஐந்து ஏக்கர் தேவைப்படும் குறைவாக பார்த்தால் நான்கு ஏக்கர் நிலம் வேண்டும்.
அதாவது:-
மா கணக்கில் 12 வரும்.
குழி கணக்கில் 1200 வரும்.
சதுர அடி கணக்கில் 172800 வரும்.
ECR பகுதியில் கிடைத்தால் நல்லது. இந்த விஷயத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் ஒத்துழைக்க பங்கு உண்டு. தயவுசெய்து எல்லோரும் ஒத்துழைப்பு தாருங்கள். நமதூருக்கு இப்படியான ஒரு மின் வசதி வருமேயானால் அது நம் எல்லோருக்கும் பயன் தரும் என்பதில் ஐயமில்லை.
மேலதிக விபரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
இப்படிக்கு,
கே.எம்.ஏ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer, Adirampattinam-614701
consumer.and.humanrights614701@gmail.com

இப்படியான சந்தர்ப்பம் நமதூருக்கு வருவதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். ஒரே இடமாக சதுரமாக இருந்தால் நல்லது.
ReplyDeleteஇப்படிக்கு.
கே.எம்.ஏ. ஜமால் முஹம்மது.
75 02 87 07 67
சந்தர்ப்பம் நமதூருக்கு வருவதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். ஒரே இடமாக சதுரமாக இருந்தால் நல்லது.
ReplyDelete110/33/11 அந்தஸ்த்து பெற்றிப்பது வரவேர்க்கவேண்டிய தான், தற்போது இயங்கிகொண்டிருக்கும் மின்சாரவாரியத்துக்கு நிலம் பொது மக்களால் வழங்கப்பட்டவை. அப்போது ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் ஒவ்வொரு தெருவிலுருந்து பயனாளிகளின் அடிப்படையில் (Single Phase , triple phase ) பணம் தெருவின் பஞ்சாயத்தார்கள் மூலம் வசூலிக்க பட்டு கொடுக்கப் பட்டது,
ReplyDeleteஇப்போ கேள்வி என்ன " பூனைக்கு மணி கட்டுவது யாரு ? "
பூனைக்கு மணி கட்டுவது ஒரு பெரிய விஷயமா? நிலத்தை மட்டும் காட்டுங்கள், விலையை பேசிக் கொள்ளலாம்.
Deleteநிலம் உள்ளோர் நமதூர் நலன் கருதி மின்சாரவாரியத்திற்கு விலை நிர்ணயித்து கொடுக்கலாம். அப்படி விற்க விருன்புவோர் K.M.A. ஜமால் காக்காவிடம் விளக்கம் கேட்டுக் கொள்ளலாம்.
ReplyDeleteThank you Mr.Jamal brother very important action
ReplyDeleteநல்ல முயற்சி. பொதுநலவாதிகள் இங்கு ஏறாளம். வெற்றி இனிதே கைகூடும். நம்புவோம். முயலுவோம்.
ReplyDelete