.

Pages

Saturday, October 4, 2014

முத்துப்பேட்டையில் ஆட்டோ மரத்தில் மோதி விபத்து ! இருவர் படுகாயம் !!

முத்துப்பேட்டை மஜீதியா தெருவை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன்[ வயது 40 ] சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது நண்பர் ஸமது. இவர்கள் இருவரும் இன்று முத்துப்பேட்டை ஜாம்புவான்ஓடை வடகாடு அருகே ஆட்டோ வாகனத்தை ஒட்டி செல்லும் போது திடீரென் குறுக்கே புகுந்த இருசக்கர வாகனத்தால் நிலைதடுமாறிய ஆட்டோ அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுனருக்கு கால் முறிவு ஏற்பட்டது. ஆட்டோவில் பயணம் சென்ற ஸமதுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோவின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.

செய்தி மற்றும் படங்கள் :
முத்துப்பேட்டை சூனா ஈனா 




No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.