அதனொரு பகுதியாக தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் மீன்துறை ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்க ( சிஐடியு ) மாவட்ட செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் (சிஐடியு ) மாநில செயலாளர் கே.எம்.லிங்கம் சிறப்புரையாற்றினார்.சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் , ' தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் மீனவர்களுக்கு அறிவித்த சலுகைகளை அரசாணையாக வெளியிட வேண்டும். மீனவர் நலவாரியத்தை அமைத்து முறையாக தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். 60 வயதை கடந்த ஆண், பெண் மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும். சுனாமி நிதியை முதலமைச்சர் நிதியில் சேர்த்ததை ரத்து செய்து அதுபற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
தஞ்சை மாவட்டத்தில் விடுபட்ட மீனவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி சுனாமி வீடு கட்டி தரவேண்டும். மனை இல்லாதவர்களுக்கு மனை
ஒதுக்கி, வீடு கட்டி தரவேண்டும். நலவாரிய பணப்பயன்களை ஏறியுள்ள விலைவாசி உயர்விற்கேற்ப இரட்டிப்பாக்கி, தாமதமின்றி வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் மீனவர் குறைதீர்ப்பு மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும் .
இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட வலைகள், படகுகள் ஆகியவற்றை திரும்ப பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல் வளத்தை பாதிக்கும் இரட்டை மடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிரந்தர தீர்வு காணவேண்டும். தஞ்சாவூரில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை மல்லிபட்டினத்திற்கு மாற்றவேண்டும் ' என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர் .முடிவில் மீன்துறை அலுவலகத்தில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் பாஸ்கரன், மீன் துறை ஆய்வாளர் ஆனந்த் ஆகியோரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, வழக்கறிஞர் வீ.கருப்பையன், நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகி குத்புதீன், சிஐடியு மீனவர் சங்க நிர்வாகிகள் பெரியண்ணன், குமார், நிஜாமுதீன், அப்துல்காதர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஆண், பெண் மீனவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
எஸ். ஜகுபர் அலி, பேராவூரணி


செவிடன் காதில் சங்கு ஊதியது போல தான் இவங்க போராட்டம், ஆளும் கட்சியே அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கு, இவங்க கோரிக்கை யாரு கேட்க இருக்கா?
ReplyDelete