பெருநாள் அன்று விசேஷமாக தயாரிக்கப்படும் காலை மற்றும் பகல் உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு ஒரு மாற்றத்திற்காக இரவில் இலகுவான எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை உட்கொள்வதை வாடிக்கையாக பின்பற்றுவார்கள். குறிப்பாக சைவ உணவு வகைகளை விரும்பி சாப்பிட எண்ணுவார்கள்.
இன்று இரவு அதிரையில் உள்ள பெரும்பாலான உணவகங்களுக்கு விடுமுறை அள்ளிக்கப்பட்டிருப்பதால், அதிரையர்கள் அருகில் உள்ள பட்டுக்கோட்டை நகருக்கு வாகனங்களில் ஒன்றாக சென்று அங்குள்ள சைவ உணவகங்களில் இட்லி சாம்பார் ரோஸ்ட் போன்ற இலகுவான உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டனர். இன்று இரவு மட்டும் அதிகமான அதிரையர்கள் அங்குள்ள சைவ உணவகங்களில் தென்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது.











ஆண்டுதோறும் இதை ஒரு வழமையாக கடைபிடிக்கும் அதிரை சகோதரர்களுக்கு .....ஊரில் இட்லி மாவுகள் விற்கின்றன அதில் வீட்டில் இட்லி சமையல் செய்து சாப்பிடலாமே ....கூட்டம் அதிகம் வரும்போது ஹோட்டல்களில் சாம்பாரிலும் சட்னியிலும் தண்ணீரை ஊற்றி தான் பரிமாறுவார்கள் .முடிந்தவரை ஹோட்டல் சாப்பட்டை தர்விர்ப்பதே நலம் .
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
எந்த மாதிரியான சாப்பாடு வேண்டும் என்றால் தன் வீட்டில் உள்ள பெண்களிடம் கேட்டு சமைத்து சாப்பிடுவதே சாலச்சிறந்தது. இதில் பெண்களுக்கும் வேலை கொடுத்தது மாதிரி இருக்கும், நமக்கும் சுத்தமான சுவையான உணவு கிடைத்தது மாதிரி இருக்கும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
தவிர்க்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால், என்றைக்காவது ஒருதடவை ஹோட்டல் சாப்பாட்டை நாடலாம், இதுவே வழக்கமாக இருந்துவிடக்கூடாது.
Deleteஎன்ன சார் நீங்க? டீயில ஒரு ஈ செத்துக்கிடக்கறதுக்கு போயி ரொம்ப கோபப்படுறீங்க?
Deleteஅப்போ ஈ செத்துக்கிடக்கறது அவ்ளோ சாதாரண விஷயமா?
பின்ன.. அதோ போறாரே.. அவர் சாப்ட பிரியாணில ஒரு பல்லியே செத்துக் கிடந்தது... அவரே சும்மா போறாரு...
அமெரிக்காவில், பென்ஸில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்கில் வாழ்ந்த ஜெஃப் என்பவருக்கு 38 வயதுதான், ஆரோக்கியமானவர், வாட்டசாட்டமானவர். ஒருநாள் குடும்பத்தோடு ரெஸ்டாரன்ட்டுக்கு சாப்பிட போனார். ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் இறந்துபோனார். என்ன காரணம்? அவர் சாப்பிட்ட வெங்காயத்தாளில் ஹெப்படைடிஸ்-A வைரஸ் இருந்திருக்கிறது.
Deleteமேற்கத்திய நாடு ஒன்றில் உணவிற்கென்று செலவிடப்பட்ட மொத்த பணத்தில் கிட்டத்தட்ட பாதி பணம் ரெஸ்டாரன்ட்டில்தான் கொட்டப்பட்டிருக்கிறது. அங்கு உணவினால் பரவும் நோய்க்கு ஆளானவர்களில் பாதிக்குப் பாதி பேர் ரெஸ்டாரன்ட்டில் சாப்பிட்டவர்களே.
Deleteஉண்மைதான், ரெஸ்டாரன்ட்டில் சாப்பிட நினைத்தால் சமையலுக்கு வேண்டிய சாமான்களை வாங்குவது, சமையலறையைச் சுத்தம் செய்வது, சமைப்பது எல்லாம் நீங்கள் செய்ய மாட்டீர்கள், வேறொருவர்தான் செய்வார். ஆனால், எங்கே சாப்பிடுவது, எதைச் சாப்பிடுவது, மீதமிருந்தால் அதை எப்படி எடுத்து செல்வது என்று உங்களால் தீர்மானிக்க முடியும்.
Deleteபிரேசிலில் வசிக்கும் டியா சொல்கிறாள்: “ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு முதல் முறை போகும்போது சுத்தி நோட்டம் விடுவோம். மேஜை, மேஜை விரிப்பு, பாத்திரம் எல்லாம் சுத்தபத்தமா இருக்கா, பரிமாறுகிறவங்க சுத்தமா இருக்காங்களானு பார்ப்போம். சரியில்லனா, வேற ரெஸ்டாரன்ட்டுக்கு போயிடுவோம்.” சில நாடுகளில் சுகாதார அதிகாரிகள் அடிக்கடி ரெஸ்டாரன்டுகளைச் சோதனையிடுவார்கள். அவை, எந்தளவு சுத்தமானதென தரம் பிரித்து, அதைப் பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக எழுதிப் போடுவார்கள்.
Deleteஇன்றைய இயந்திர உலகில் ஹோட்டலில் சென்று சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நட்ச்சத்திர ஹோட்டல்களாக இருந்தாலும் சரி, சிறிய கையேந்திபவன்களான தெருவோரக்கடைகளாக இருந்தாலும் சரி நாம் சுத்தமான உணவை உண்ணவே விரும்புகின்றோம். நட்சத்திர ஹோட்டல்களுக்கு செல்பவர்கள் ஆடம்பரம், ரம்யமான சூழல், சமூக அந்தஸ்து என்பவற்றைத் தாண்டி சுகாதாரமான உணவை உண்பதற்காகவும் செல்கின்றார்கள்.
Deleteஅது என்னவோ தெரியவில்லை இந்தக் கால இளைஞர்களுக்கு வீட்டுச் சமையல் பிடிப்பதில்லை.தரமில்லாத ஹோட்டல் சாப்பாட்டையே விரும்புகின்றனர்.. இதன் விளைவு பிறகே அறியவரும், ஆகவே முடிந்த வரை ஹோட்டல் சாப்பாட்டை தவிர்த்துக் கொள்வது நல்லது.
ReplyDelete