.

Pages

Saturday, October 11, 2014

அதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் பெருநாள் சுற்றுலா ! [ படங்கள் இணைப்பு ]

கடந்த பெருநாள் பண்டிகையை  அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்க உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பெருநாள் அன்று ஒன்றாக கூடிய இவர்கள் அனைவரும் வழக்கம் போல் இந்த முறையும் பெருநாள் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

அதன்படி வாடகைக்கு வாகனத்தை எடுத்துக்கொண்ட இவர்கள் அதிரையிலிருந்து ஈசிஆர் சாலை வழியாக இராமேஸ்வரம் பகுதிக்கு புறப்பட்டு சென்றனர். இப்பகுதியில் காணப்படும் அரியமான் கடற்கரை பகுதி, பாம்பன் பாலம், பாம்பன் படகு சவாரி, இராமேஸ்வரம், தனுஸ்கோடி, அங்குள்ள அரிய வகை நீர்வாழ் உயிரினங்களை உள்ளடக்கிய அழகிய தீவுகள் மற்றும் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்கா ஆகிய பகுதிகளை கண்டு களித்தனர். இதில் இஸ்லாமிய உறுப்பினர்களுடன், பிறமத உறுப்பினர்களும் ஆர்வத்துடன் பங்குகொண்டனர்.

சுற்றுலா சென்று வந்த செலவுகளை ஒவ்வொருவரும் சரிசமமாக பங்கிட்டு கொண்டனர். வெற்றிகரமாக பகல் நேர சுற்றுலாவை முடித்துக்கொண்டு ஒற்றுமையுடன் ஊர் திரும்பிய இவர்கள் வழக்கம் போல் அவரவர்களின் பணிகளில் மூழ்கிகிடக்கின்றனர்.











4 comments:

  1. மாஷா அல்லாஹ்...

    ReplyDelete
  2. உங்கள் உணர்வுகள் இன்ஷா அல்லா ஒரு நாள் வெளிச்சத்திற்கு தெரிய வரும் .உங்கள் அனைவருக்கும் என் அன்புற்க்னிய பெருநாள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    கூப்பிட்டா நானும் வந்திருப்பேனே.‎
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.