இதுகுறித்து பேராவூரணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் வீர.சந்திரசேகரன், ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ. ஜீவானந்தம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தீபாவளி நெருங்குகிறது.தீபாவளி என்றாலே வெடிகளை வெடித்தும், மத்தாப்புகளை கொளுத்தியும் கொண்டாடுவதே சிறுவர் முதல் பெரியவர் வரை நினைவுக்கு வருகிறது.
ஆனால் நம் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இயற்கை சமநிலையை பாதிப்பதில், காற்று மண்டல மாசுபாடு மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. கந்தக டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு ஆகிய தீய வாயுக்களின் வெளியேற்றம் காற்றை பெருமளவு மாசுபடுத்தி புற்றுநோய், சுவாசக்கோளாறுகள் முதலிய உயிர்க்கொல்லி நோய்களுக்கு காரணமாகிறது. இத்தகைய வாயுக்கள் பட்டாசுகள் வெடிக்கும்போது ஒரே நாளில் டன் கணக்கில் வாயு மண்டலத்தில் பரவி தீராத நோய்களுக்கு மனித குலத்தை ஆளாக்குகின்றன.
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பெருகி வரும் இந்நாளில் நமது காற்று மண்டலத்தை காத்து, எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச்செல்லவும், நாமும் நோயின்றி ஆரோக்கிய வாழ்வு வாழவும் உறுதி எடுக்க வேண்டும்.
பட்டாசுகள் வெடிப்பதனால் சுற்றுச்சூழலில் ஒலி, ஒளி மாசுக்கள் ஏற்பட்டு ஏற்கனவே நோயாளியாக உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் பட்டாசு தயாரிப்பில் குழந்தை தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். எனவே சுற்றுச்சூழலை காக்கவும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் உறுதிபூண்டு, வரும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதை தவிர்த்து விட்டு, ஆளுக்கொரு மரக்கன்று நட்டு "பசுமை தீபாவளி"யாகக் கொண்டாடுவோம்.
இதனை அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் " என கூறியுள்ளனர்.
செய்தி: எஸ். ஜகுபர் அலி
பேராவூரணி.

பட்டாசு கொளுத்தி வீண் செய்யும் காசை, பக்கத்தில் உள்ள இல்லாத ஏழை மக்களுக்கு கொடூத்து இன்பம்
ReplyDeleteகண்டு மகிழ்வோம்.