.

Pages

Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Tuesday, April 23, 2019

காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!

அதிரை நியூஸ்: ஏப்.23
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் இன்று (ஏப்.23) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;
சமூக ஊடகங்களின் மூலமாக இணையத்தில் மத அமைப்புகள், சாதி அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் மற்றவர்கள் குறித்து தவறான அவதூறன பேச்சுக்கள், கருத்துக்கள், படங்கள், காட்சிப்பதிவுகள், கருத்துப்பதிவுகள் ஆகியவற்றை உருவாக்கி பதிவேற்றுதல் சட்டப்படி குற்றமாகும். அப்படி பதிவிறக்கம் செய்து பார்த்து அதை மற்றவர்களுக்கு பரப்புதலும் இந்திய தண்டணைச் சட்டம் பிரிவுகள் 504, 505 மற்றும் பிரிவு 67 தகவல் தொழில் நுட்பம் சட்டம் 2000–ன் படி குற்றமாகும். இந்த குற்றங்கள் ஜாமினில் விடமுடியாத குற்றங்களாகும். சமூக ஊடகங்களில் இருப்பவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பட்ட காட்சி பதிவுகள், கருத்துப்பதிவுகளை மற்றவர்களுக்கு பகிரும் போது, அது நீங்கள் தெரிவிக்கும் கருத்தாகவே சட்டத்தின் முன் கருதப்படும். எனவே சமூக ஊடகத்தை சரியான முறையில் பயன்படுத்தி மேமற்கண்ட சமூக விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Friday, April 20, 2018

அதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாளை (ஏப்.21) முதல் ஏப்.25 வரை 5 நாட்கள் அவ்வப்போது மின்தடை!

அதிராம்பட்டினம், ஏப்.20
தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் த.நா சங்கரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;
நெம்மேலிதிப்பியக்குடி ~ பட்டுக்கோட்டை 1 மற்றும் 2 வது மின் பாதையில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளைச் சரி செய்வதற்காக ஆலடிகுமுளை  பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் இரு புதிய உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளும், 110 கி.வோ பேராவூரணி துணை மின் நிலையத்தில் திறன் மின் மாற்றியைத் தரம் உயர்த்தும் பணிகளும் ஏப்.21 ந் தேதி முதல் ஏப். 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்பணிகளின் போது ஏற்படும் கூடுதல் மின் பளுவை ஈடு செய்யும் விதமாக ஏப்.21 ம் தேதி காலை 9 மணி முதல் ஏப்.25 ம் தேதி மாலை 5 மணி வரை 5 நாட்களுக்கு பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது இருமுனை மின்சாரம் வழங்கவும் அல்லது தேவை ஏற்பட்டால் மின்சார நிறுத்தமும் மேற்கொள்ளப்படும்.

அறிவிப்பில் கூறியிருக்கும் காலக்கட்டத்தில், அதிராம்பட்டினம் பகுதிகளிலும் அவ்வப்போது  மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, March 5, 2018

அதிராம்பட்டினத்தில் ரூ.500 ல் முழு உடல் பரிசோதனை!

அதிராம்பட்டினம், மார்ச் 05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி அருகில் (அல் ஷனா மெட்ரிக். பள்ளி அருகே) 'அமீர் ஹெல்த் & வெல்த் சென்டர்' என்ற பெயரில் புதிதாக ஆயுர்வேத மருந்தகம் கடந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

இம்மருந்தகத்தில் பிரதி வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 2 தினங்களில் சலுகை கட்டணத்தில் உடல் பரிசோதனை நடைபெற் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருந்தக உரிமையாளர் சேக் நசுருதீன் கூறியது;
'மருந்தகத்தில் நாளை (மார்ச் 05) செவ்வாய்க்கிழமை முதல் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில், காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். ரூ.500 கட்டணத்தில், ரூ. 1500 மதிப்பிலான முழு உடல் பரிசோதனை மற்றும் ரிப்போர்ட் உடனடியாக வழங்கப்படும்.

'கேவா' என்ற ஆயுர்வேத மருந்தக நிறுவனத் தயாரிப்பில், புற்றுநோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், தோல் வியாதிகள், மூட்டு வலி, இருதய நோய், மூலம், அல்சர், உடல் பருமன், முடி உதிர்தல், தைராய்டு, குழந்தையின்மை, சளி, ஆஸ்துமா, மலச்சிக்கல் உட்பட சுமார் 30 க்கும் மேற்பட்ட நோய்கள் Magnetic Resonance Analyzer 4G மூலமாக கண்டறிந்து, அதற்கு உண்டான ஆலோசனைகள் மற்றும் பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் வழங்கப்படும்' என்றார்.

மேலதிக தகவல் மற்றும் முன்பதிவு தொடர்புக்கு: 
8144443086, 7339498828, 9788204554

Sunday, December 17, 2017

வெளிநாடு வாழ் அதிரையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அதிராம்பட்டினம், டிச.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை பகுதி வெளிநாடு வாழ் அதிரையர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அதிராம்பட்டினம் சரக வருவாய் ஆய்வாளர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை வருவாய் கிராம பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத 18 வயது பூர்த்தியடைந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களது பெயரினை அவர்களது நேரடி குடும்ப உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்க படிவம் 6(A) பூர்த்தி செய்து டிச.15 ந் தேதி முதல், அதிராம்பட்டினம் /  ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர்கள் அல்லது அதிராம்பட்டினம் சரக வருவாய் ஆய்வாளர் ஆகியோரில் ஒருவரிடம் கீழ்க்கண்ட ஆவணங்களை இணைத்து வழங்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச் சீட்டு நகல் (பாஸ்போர்ட்) 1
கடவுச் சீட்டு அளவு கலர் புகைப்படம் 1
குடும்ப அட்டை நகல் 1
ஆதார் அட்டை நகல் 1

Thursday, September 28, 2017

தஞ்சை ~ பெற்றோரை தேடும் 5 வயது சிறுமி

கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன் 6 மாதப் பெண் குழந்தையாக இருந்த ஒரு பெண் குழந்தை, தஞ்சை பெரிய கோயில் அருகிலிருந்து குழந்தையை கடத்தி விற்பனை செய்யும் பெண் ஒருவரால் கடத்தி கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வாண்டூர் காவல் துறையினரால் அந்தப் பெண் குழந்தை 2016-இல் மீட்கப்பட்டது.  பின்னர், மலப்புரம் குழந்தைகள் நலக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது குழந்தைகள் இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளது. அந்த பெண் குழந்தைக்கு யாழினி என்று காப்பக நிர்வாகிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

முறைப்படி குழந்தையை வேறு தகுதியான தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கவோ அல்லது ஆதரவற்றோர் என பிறப்பு சான்றிதல் பதிவேற்றம் செய்ய வேண்டுமானால், அந்த குழந்தை தொலைந்து போன இடத்தில் உள்ள வட்டாட்சியர் மூலமாக சான்று பெறவேண்டும். அதற்காக அந்த குழந்தையை பறிகொடுத்தவர்கள் பற்றிய விபரங்களை பொதுமக்களிடம் தெரிவித்து, அக்குழந்தை குறித்த விபரங்களை பெறக்கோரி கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைதுள்ளனர்.

தஞ்சையில் இருந்து கடத்தப்பட்ட யாழினியின் பெற்றோர் அல்லது உறவினர்கள் யாரும் குழந்தையைத் தவறவிட்டு இருந்தால், அதற்கான உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு 30 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்கமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு 0422-2300305 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, September 11, 2017

அதிராம்பட்டினத்தில் 'ஸ்மார்ட் குடும்ப அட்டை' பெறுவதற்கு...

அன்புடையீர்,
தங்களது குடும்ப கார்டு- SMART CARD- இதுவரை கிடைக்க பெறாதவர்கள் அதிராம்பட்டினம், S.A.H. டவரில் 16/2 பெரிய மார்க்கட் தெருவில் பொது இ சேவை மையத்தில் உடனே பெறலாம். வரும்போது குடும்ப அட்டையில் பதிவு செய்த கைபேசியைக் (cell phone) கொண்டு வரவும்.

மேலும் வழங்கப்பட்ட குடும்ப அட்டையில் (SMART CARD) தவறுகள் இருந்தால் எங்களிடமே திருத்தம் செய்து திருத்தம் செய்யப்பட்ட புதிய குடும்ப அட்டை (SMART CARD) எங்களிடமே பெறலாம். அவசியம் குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்ட கைபேசி உடன் கொண்டு வரவும்.

இங்ஙனம்
பொது இ சேவை மையம்
கைபேசி எண் : 99520 39825
S.A.H. டவர்
16/2 பெரிய மார்க்கட் தெரு
அதிராம்பட்டனம்.
VLE ID:432443160012

Thursday, May 25, 2017

அதிரை பகுதிக்கு மே 30 ந் தேதி ஜமாபந்தி: முதியோர், விதவை உதவித்தொகை பெற, பட்டா மாறுதல் மனுக்கள் அளிக்க அழைப்பு!

பட்டுக்கோட்டை, மே 25
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் 1426-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)இன்று வியாழக்கிழமை மே 25 தொடங்கி ஜூன் 9 வரை நடைபெறவுள்ளது.

பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ஆர். கோவிந்தராசு தலைமையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் தேதி வாரியாக தீர்வாயம் நடைபெறவுள்ள உள்வட்டங்கள் விவரம்:
மே 25-ம் தேதி (வியாழன்) குறிச்சி, 26-ம் தேதி (வெள்ளி) திருச்சிற்றம்பலம், 30-ம் தேதி (செவ்வாய்) அதிராம்பட்டினம், 31-ம் தேதி (புதன்) தம்பிக்கோட்டை, ஜூன் 1-ம் தேதி (வியாழன்) நம்பிவயல், 2-ம் தேதி (வெள்ளி) பெரியக்கோட்டை, 6-ம் தேதி (செவ்வாய்) துவரங்குறிச்சி, 7-ம் தேதி (புதன்) மதுக்கூர், 8-ம் தேதி (வியாழன்) ஆண்டிக்காடு, 9-ம் தேதி (வெள்ளி) பட்டுக்கோட்டை.

இதில், பொதுமக்கள் பங்கேற்று பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, நிலங்கள் குறித்த எல்லை பிரச்சனைகளுக்கும் தீர்வு காணுதல்  உள்ளிட்ட தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மகிழங்கோட்டை, பழஞ்சூர் உட்பட அதிராம்பட்டினம் சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு வரும் மே 30 ந் தேதி திங்கக்கிழமை காலை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்து தீர்வு காண கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday, May 24, 2017

பட்டுக்கோட்டையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: அதிரை,மதுக்கூர்,பேராவூரணி பகுதி நுகர்வோர் பங்கேற்க அழைப்பு !

பட்டுக்கோட்டை, மே 24
பட்டுக்கோட்டையில் மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நாளை வியாழக்கிழமை (மே 25) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பட்டுக்கோட்டை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகச் செயற்பொறியாளர் மு. சின்னையன் தெரிவித்துள்ளது:
பட்டுக்கோட்டை பாளையம் பகுதியிலுள்ள மின் வாரிய கோட்டச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் எஸ். வெங்கடேஷ் தலைமையில் நாளை வியாழக்கிழமை (மே 25) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம்

Monday, March 6, 2017

அதிரையில் கடத்தப்பட்ட 4 ஆடுகள் மீட்பு !

அதிராம்பட்டினம், மார்ச்-6
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்ட 4 ஆடுகள் அதிரை அரசு மருத்துவமனை அருகே மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் மேய விடப்பட்டுள்ளது. உரியவர் தங்களது முழு விவரங்கள் மற்றும் தேவையான ஆதாரங்களை அளித்துவிட்டு பெற்றுச்செல்ல அழைப்பு விடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
7200525050
 

Saturday, December 3, 2016

அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு !

அதிராம்பட்டினம், டிச-03
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் ஏரிப்புறக்கரை வருவாய் கிராமங்களின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையுடன், குடும்ப அட்டை தலைவரின் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள எண் இணைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது.

இதில் ஏரிப்புறக்கரை வருவாய் கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் 3,600 பேர் உள்ளனர். இதில் 1800 பேர் மட்டுமே ஆதார் எண் இணைப்பதற்கு தேவையான தகவல்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் அளித்துள்ளனர். மீதமுள்ள 1800 பேர் இன்னும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலையுடன் காலக்கெடு முடிவடைய உள்ளதால், அதிராம்பட்டினம் மற்றும் ஏரிப்புறக்கரை வருவாய் கிராமங்களின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் தங்களது குடும்ப அட்டை நகலுடன், குடும்ப தலைவரின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், குடும்ப தலைவரின் அலைப்பேசி எண் ஆகியவற்றை குடும்ப அட்டை நகலில் எழுதி இன்று மாலைக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதிரையில் அரசு, அரசு உதவிபெரும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை !

அதிராம்பட்டினம், டிச-03
தஞ்சாவூர் மாவட்டம், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இன்று (03-12-2016 ) சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி இன்று (03-12-2016 ) சனிக்கிழமை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, December 1, 2016

நாடா புயல் - தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை !

'நாடா' புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 30, 2016

நாடா புயல் - பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை!

'நாடா' புயல் எச்சரிக்கையை அடுத்து சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் பள்ளிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய இரு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் வானூர், மரக்காணம் ஆகிய இரு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இந்த விடுமுறையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு 'நாடா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, "வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு மேலும் வலுப்பெற்று புயலாக உருவானது. இந்தப் புயலுக்கு 'நாடா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி 'நாடா' புயல் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் டிசம்பர் 2-ம் தேதியன்று வேதாரண்யம் - புதுச்சேரிக்கு இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

அவர் மேலும் கூறும்போது, 'நாடா' புயல் காரணமாக சென்னையில் நாளை அதிகாலை முதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, November 22, 2016

பட்டுக்கோட்டையில் நாளை மறுதினம் (நவ.24) மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்: நுகர்வோர் பங்கேற்க அழைப்பு !

அதிராம்பட்டினம், நவ-22
பட்டுக்கோட்டை பாளையம் பகுதியிலுள்ள மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் கே. அருள்மொழி தலைமையில் வியாழக்கிழமை (நவ.24) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம் என பட்டுக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் மு. சின்னையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, November 13, 2016

அமீரகத்தில் அதிரையரின் பாஸ்போர்ட் கண்டெடுப்பு: உரியவர் பெற்றுச்செல்ல அழைப்பு !

அமீரகம் ராஸ்அல் கைமா பகுதியில் கீழ்க்காணும் பெயரைக்கொண்டுள்ள அதிரை சகோதரரின் பாஸ்போர்ட் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர் கீழ்க்காணும் அலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பெயர்: யாசர் அரபாத்
த/பெயர்:ஹாஜா முகைதீன்
மேலதென்புற கீழ்பக்கம்
அதிராம்பட்டினம்.
தொடர்புக்கு: 
00971 55 6618867

Saturday, November 12, 2016

அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு !

அதிராம்பட்டினம், நவ. 12:
அஞ்சலகங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்கும். தலைமை அஞ்சலகங்களில் மூத்த குடிமக்கள், பெண்களுக்கு தனி கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார் பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சி. பன்னீர்செல்வம்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
பட்டுக்கோட்டை கோட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகங்கள், ( அதிராம்பட்டினம் உட்பட ) 39 துணை அஞ்சலகங்கள் பொது மக்கள் நலனுக்காக ஞாயிற்றுக்கிழமை செயல்படும்.

எனவே, பொதுமக்கள் அஞ்சலகங்களுக்குச் சென்று தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதுடன், அஞ்சல் சேமிப்புக் கணக்கு உள்ளிட்ட அனைத்து வித பண பரிவர்த்தனைகளையும் செய்யலாம்.

பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகங்களில் மூத்த குடிமக்கள், பெண்களுக்கு தனி கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதேபோல, ( அதிராம்பட்டினம் உட்பட ) அனைத்து துணை அஞ்சலகங்களிலும் மூத்த குடிமக்கள் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பொதுமக்கள் அஞ்சல் துறையின் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

Tuesday, November 8, 2016

இன்று இரவு 12 மணி முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது !

இன்று (செவ்வாய்) இரவு 12.00 மணி முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அதனைப் பயன்படுத்த முடியாது என்று பிரதமர் மோடி திடீர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாட்டுமக்களுக்கு பிரதமர் ஆற்றிய சிறப்பு தொலைக்காட்சி உரையில் அவர் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், ''நாடு முழுதும் நவம்பர் 9 மற்றும் 10 முதல் ஏ.டி.எம்.கள் செயல்படாது என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஒப்படைத்து மாற்றிக் கொள்ளலாம். ஒப்படைக்க அடையாள அட்டை அவசியம்'' என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

“கருப்புப் பணம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருந்து வருகிறது. ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள்தான் கருப்புப் பணத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் கள்ள நோட்டுகளை அடித்து விநியோகித்து வருகின்றனர். ஊழல், கருப்புப் பணம், பயங்கரவாதம் நாட்டின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியின் குறுக்கே நிற்கிறது” என்றார் பிரதமர் மோடி.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:

* ரூ.500, ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு உரிய அடையாள அட்டை காண்பிக்க வேண்டும், உதாரணமாக ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றை காண்பித்து பணமாற்றம் செய்து கொள்ளலாம்.

* டிசம்பர் 30-ம் தேதிக்குள் பணத்தை மாற்ற முடியாதவர்கள் மத்திய ரிசர்வ் வங்கியில் டிக்ளரேஷன் ஒன்றை அளித்து மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி மார்ச் 31, 2017 வரை உள்ளது. இதற்கும் அடையாள அட்டை அவசியம்.

* நாடு முழுதும் ஏடிஎம்.கள் நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் செயல்படாது.

* பெட்ரோல் நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், சர்வதேச விமான நிலையங்கள், ரயில் டிக்கெட்டுகள் ஆகியவற்றிற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகளை நவம்பர் 11-ம் தேதி வரை பயன்படுத்தலாம்.

* சில நாட்களுக்கு ஏடிம்-லிருந்து ரூ.2000 மட்டுமே எடுக்க அனுமதி. இது பிற்பாடு ரூ.4,000 ஆக அதிகரிக்கப்படும்.வங்கி ஏடிஎம்-களிலிருந்து நாளொன்றுக்கு ரூ.10,000 வரை எடுக்க அனுமதி உண்டு, வாரத்திற்கு ரூ.20,000 வரை மட்டுமே வங்கி ஏடிஎம்களிலிருந்து பணம் எடுக்க முடியும்.

* இண்டெர் நெட் பேங்கிங், பணம், டிடி நடவடிக்கைகளில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.

* நாளை (நவ.9) வங்கிகள் செயல்படாது.

* புதிய ரூ.500 நோட்டுகளும், ரூ.2000 நோட்டுகளும் புழக்கத்திற்கு வரும்.

*நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக போராட இது ஒரு வாய்ப்பு. இதுவரை பல்வேறு வழிமுறைகளில் ஊழல்வாதிகளிடமிருந்து ரூ.1,25,000 கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளோம்”

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். போதிய அளவில் மாற்று ரூபாய் நோட்டுகள் கையிருப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.

Saturday, October 29, 2016

மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி -2016

அதிராம்பட்டினம், அக்-29
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜூம்ஆ மஸ்ஜித் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் 12, 13 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் ஜும்மா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் மாநில அளவில் உள்ள பள்ளி / மதரஸா மாணவர்கள் கலந்துகொள்ளும் வகையில் 30 ஜூஸ்வு மனன திறனாய்வு போட்டி நடத்தப்பட உள்ளது.

இப்போட்டியில் பங்கு பெற ஆர்வம் உள்ளவர்கள் இப்பதிவில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.

போட்டி விதிமுறைகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள் குறித்து தகவல்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது:
 
 
 
குறிப்பு :
1.  இப் போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்யக் கடைசி தினம் 05-11-2016 என  நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.                                                    
                     
2.  இத்தோடு இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தையே தேவைக்கேற்ப நகல் எடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். 

Wednesday, October 26, 2016

பட்டுக்கோட்டையில் நாளை (அக். 27) மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்: நுகர்வோர் பங்கேற்க அழைப்பு !

அதிராம்பட்டினம், அக். 26
பட்டுக்கோட்டை பாளையம் பகுதியிலுள்ள மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் கே. அருள்மொழி தலைமையில் நாளை (அக். 27) வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம் என பட்டுக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் மு. சின்னையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, July 26, 2016

அதிரையர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.

கடந்த சில மாதங்களாக நமது பகுதியில் மின் வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு நடைபெறவில்லை.

ஆகையால், நாளை மறுநாள், அதாவது 28/07/2016- வியாழக் கிழமை, காலை 09.00மணி முதல் மாலை 06.00மணிவரை மின்வாரிய பராமரிப்பு பணிக்காக  அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  மின்சாரம் விநியோகம் இருக்காது.

இதை அதிரை மக்கள் கனிவுடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்: தமிழக மின்வாரியம். மதுக்கூர் மின் பகிர்மான வட்டம்.
 K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
PRESIDENT of pkt Tk
State Executive Member
National Consumer Protection Service Centre.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com