.

Pages

Saturday, October 4, 2014

அதிரையில் சர்வதேசப் பிறை அடிப்படையிலான ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை ! [ படங்கள் இணைப்பு ]

தமிழகத்தில் எதிர்வரும் [ 06-10-2014 ] அன்று ஹஜ் பெருநாள் கொண்டாட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் 'உலகில் ஒரு இடத்தில் பிறை கண்டால் முழு உலகும் அதைக்கடைப்பிடிக்க வேண்டும்' என்ற சர்வதேசப்பிறை அடிப்படையில் அதிரையில் இன்று காலை 7.30 மணியளவில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.

தொழுகையை ஏ.எல் மெட்ரிக் பள்ளியின் இமாம் ஸாபீக் நடத்தினார். முன்னதாக பெருநாள் தொழுகை குறித்து விளக்கி கூறினார். இதில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.






3 comments:

  1. உலகங்கிலும் உள்ள சகோர சகோதரிகளுக்கும் என்னுடைய ஹஜ் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.

    ReplyDelete
  2. ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்!

    இன்று ஊரில் பெருநாள் தொழுகையை அல்லாஹ்விர்க்காக நிறைவேற்றிய சகோதர சகோதரிகளுக்கு அல்லாஹ் ரஹ்மத்தை பொழிவானாக.

    ReplyDelete
  3. ஒவ்வொரு ரமழான் மற்றும் அதையடுத்து வரும் பெருநாளின்போது மாதத்தின் முதல் நாளை தீர்மானிப்பதில் பலத்த சர்ச்சைகள் எழுவது வழமையாகி வருகிறது. அறியாமை, பிடிவாதம், மனோ இச்சையைப் பின்பற்றுதல், கெளரவம் பார்ப்பது போன்றவை இந்த சர்ச்சைகளுக்கு முக்கிய காரணங்களாகும். எனவே தான் உண்மையை உரக்கச் சொன்னாலும் உறைக்காமல் போய்விடுகிறது.

    ஒரே இறைவன், ஒரே இறுதி இறைத்தூதர், ஒரே கிப்லா ஆகியவற்றால் ஒன்றுபட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் தனது மகிழ்ச்சிக்குரிய நாள் எது என தீர்மானிப்பதில் குழம்பி நிற்பது நமது ஈமானின் பலவீனத்தையே காட்டுகிறது. உலகிற்கே வழிகாட்ட வந்த மார்க்கத்தை பின்பற்றி வரும் ஒரு மிகப்பெரும் பொறுப்புள்ள சமுதாயம் இது விஷயத்தில் - நவீன யுகத்திலும் - தடுமாற்றம் கொண்டிருப்பது இஸ்லாமைப் பற்றிய தவறான எண்ணத்தை மற்றவர்கள் மத்தியில் ஏற்படக் காரணமாகிவிடும்.

    அவரவர் பகுதியில் பிறையை புறக்கண்ணால் பார்த்து தான் மாதத்தின் முதல் நாளை தீர்மானிக்க வேண்டும் என்று ஒரு சாராரும் பிறையை புறக்கண்ணால் பார்த்தோ அல்லது பிறை பார்த்த தகவலை அறிந்தோ அதை தீர்மானித்துக் கொள்ளலாம் என்று மற்றொரு சாராரும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

    பிரிதொரு சாரார், பிறையை புறக்கண்ணால் பார்க்கவோ அல்லது பிறையை பார்த்த தகவல் அறியவோ வேண்டிய அவசியமில்லை. விஞ்ஞானக் கணிப்பின் மூலம் முற்கூட்டியே மாதத்தின் முதல்நாளை முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.