.

Pages

Sunday, October 5, 2014

ஹஜ் மினாவில் ஹாஜிகளுக்கு உதவும் IFF தன்னார்வலர்கள் [ படங்கள் இணைப்பு ]

புனித ஹஜ் கடமையின் ஒரு முக்கிய அம்சமான ஹாஜிகளின் அரபா மைதான ஒன்று கூடல் நிறைவடைந்து. அதனைத் தொடர்ந்து ஹாஜிகள் அனைவரும்  முஸ்தலிபா சென்று அங்கு இரவை கழித்தனர். பின் அங்கிருந்து நேற்று மினா சென்றனர். இப்ராஹிம் (அலை) அவர்கள் ஷைத்தானை கல்லெறிந்து விரட்டியதை நினைவுகூறும் பொருட்டு தாங்களும் ஜம்ராத்தில் கல்லெறிந்தனர்.

ஜனநெருக்கடி அதிகம் ஏற்படக்கூடிய பகுதியான ஜம்ராத் மற்றும் மினா சாலைகளில் இந்தியா பிரடர்னிடி போரத்தின் தன்னார்வ தொண்டர்கள் அதிக அளவில் ஹாஜிகளுக்கு உதவி புரிந்தனர். அவர்கள் ஹாஜிகளுக்கு வழிகாட்டுதல், முதியோர்களை சக்கர நாற்காலிகள் மூலம் அவர்களுடைய குடில்களில் சேர்ப்பித்தல், மருத்துவ சேவை புரிதல் என பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.

பெண் ஹாஜிகளுக்கு அதிக அளவில் உதவிபுரியும் பொருட்டு விமன்ஸ் பிரடர்னிடி போரத்தைச் (WFF) சார்ந்த பெண் தன்னார்வ தொண்டர்கள் நேற்று முதல் களமிறங்கியுள்ளார்கள். மற்றும் ஸ்டுடன்ஸ் பிரடர்னிடி போரத்தைச் (SFF)சார்ந்த மாணவர்களும் ஹாஜிகளுக்கு உதவி வருகின்றனர்.

இவர்களின் தன்னார்வ தொண்டு ஹாஜிகளுக்கு பெரும் உதவியாய் அமையும் என்பதில் ஐயமில்லை.





No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.