முத்துப்பேட்டை அருகே உள்ள விளாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 50). உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் வீட்டில் தனியாக இருந்த பாஸ்கரிடம் ஜோசியம் பார்ப்பதாக கூறியுள்ளார்.
மேலும் பாஸ்கரிடம் உங்களது வீட்டில் தோஷம் இருப்பதாகவும் வீட்டில் இருக்கும் நகைகளுக்கு பூஜை செய்து வைத்தால் அவை பாதுகாப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.
அதனை நம்பி பாஸ்கர் வீட்டில் இருந்த நகைகளை கொண்டு வந்து அந்த நபரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அவர் நகைகளை வீட்டின் பின்புறத்தில் வைத்து பூஜை செய்வதாக கூறி நகைகளை ஒரு துணிப்பையில் மடித்து வைத்துள்ளார்.
பின்னர் மயக்கப்பொடியை பாஸ்கரின் முகத்தில் தூவிவிட்டு அங்கிருந்து மறைந்தார். மயக்கம் தெளிந்த பாஸ்கர் அந்த வாலிபரை தேடியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் 5 பவுன் நகையுடன் தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மர்ம வாலிபர் குறித்து விசாரித்து வந்தனர்.
அப்போது முத்துப்பேட்டை பிள்ளைவிளாகம் பகுதியில் 4 பேர் ஜோசியம் பார்ப்பதாக கூறி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் அங்கு ஜோசியம் பார்ப்பதாக கூறி சென்ற 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த புகைப்படங்களை எடுத்துசென்று பாஸ்கரிடம் காட்டினர். அதில் நகையை திருடிச் சென்ற வாலிபரின் புகைப்படத்தை அவர் அடையாளம் காட்டினார்.
இதையடுத்து மற்ற 4 பேரிடமும் அந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் மன்னார்குடி மன்னை நகரை சேர்ந்த நாகராஜ் மகன் முருகன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து மன்னார்குடிக்கு சென்ற முத்துப்பேட்டை போலீசார் அங்கு வீட்டில் இருந்த முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி:மாலைமலர்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.