இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதல் ஆட்டமாக பட்டுக்கோட்டை விவேகானந்தா அணியினரும், அதிரை எஸ்எஸ்எம்ஜி அணியினரும் மோதினர். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 2-1 என்ற கணக்கில் கோல் அடித்து பட்டுக்கோட்டை அணியினர் வெற்றிபெற்றனர்.
இரண்டாவது ஆட்டமாக பட்டுக்கோட்டை ஏவிகே அணியினரும், அதிரை AFFA பி அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமநிலை எடுத்து இருந்தனர். பின்னர் டை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டு 4-2 என்ற கணக்கில் கோல் அடித்து பட்டுக்கோட்டை ஏவிகே அணியினர் வெற்றிபெற்றனர்.
இன்றைய ஆட்டங்களின் அம்பயர்களாக வாசு தேவனும், ஷபா ஆகியோர் பணியாற்றினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழக்கம் போல் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.
இன்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.
நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. இதில் முதல் ஆட்டமாக பட்டுக்கோட்டை அணியினரோடு மேலநத்தம் அணியினரும், இரண்டாவது ஆட்டமாக எவிகே பட்டுக்கோட்டை அணியினரோடு பட்டுக்கோட்டை விவேகானந்தா அணியினரும் மோத இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நாளைய ஆட்டம் சரியாக மாலை 4.45 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

This boy from PKT team player or ad?
ReplyDelete