.

Pages

Friday, May 8, 2015

AFFA கால்பந்தாட்ட போட்டி: தொடர் வெற்றிகளில் பட்டுக்கோட்டை அணிகள் !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று [ 08-05-2015 ] மாலை நமதூர் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

நேற்று நடைபெற வேண்டிய ஆட்டங்கள் கனமழை பெய்ததால் மைதானத்தை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் இரண்டு ஆட்டங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதில் முதல் ஆட்டமாக பட்டுக்கோட்டை செவன்ஸ் அணியினரும், மேலநத்தம் அணியினரும் மோதினர். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-0 என்ற கணக்கில் கோல் அடித்து பட்டுக்கோட்டை செவன்ஸ் அணியினர் வெற்றிபெற்றனர்.

இரண்டாவது ஆட்டமாக பட்டுக்கோட்டை ஏவிகே அணியினரும்,  பட்டுக்கோட்டை விவேகானந்தா அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 2-0 என்ற கணக்கில் கோல் அடித்து பட்டுக்கோட்டை ஏவிகே அணியினர் வெற்றிபெற்றனர்.

இன்றைய ஆட்டங்களின் அம்பயர்களாக வாசு தேவனும், ஷபா ஆகியோர் பணியாற்றினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழக்கம் போல் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.

இன்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.

நாளைய ஆட்டமாக அதிரை AFFA அணியினரோடு, ஆலத்தூர் அணியினர் மோத இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். நாளைய ஆட்டம் சரியாக மாலை 5.15 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

1 comment:

  1. Affa அணியின் கேப்டன் அஸ்ரஃப் கோல் அடித்தால் தூபாய்க்கு விசா வழங்கப்படும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.