நேற்று நடைபெற வேண்டிய ஆட்டங்கள் கனமழை பெய்ததால் மைதானத்தை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் இரண்டு ஆட்டங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதில் முதல் ஆட்டமாக பட்டுக்கோட்டை செவன்ஸ் அணியினரும், மேலநத்தம் அணியினரும் மோதினர். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-0 என்ற கணக்கில் கோல் அடித்து பட்டுக்கோட்டை செவன்ஸ் அணியினர் வெற்றிபெற்றனர்.
இரண்டாவது ஆட்டமாக பட்டுக்கோட்டை ஏவிகே அணியினரும், பட்டுக்கோட்டை விவேகானந்தா அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 2-0 என்ற கணக்கில் கோல் அடித்து பட்டுக்கோட்டை ஏவிகே அணியினர் வெற்றிபெற்றனர்.
இன்றைய ஆட்டங்களின் அம்பயர்களாக வாசு தேவனும், ஷபா ஆகியோர் பணியாற்றினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழக்கம் போல் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.
இன்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.
நாளைய ஆட்டமாக அதிரை AFFA அணியினரோடு, ஆலத்தூர் அணியினர் மோத இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். நாளைய ஆட்டம் சரியாக மாலை 5.15 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

Affa அணியின் கேப்டன் அஸ்ரஃப் கோல் அடித்தால் தூபாய்க்கு விசா வழங்கப்படும்.
ReplyDelete