தமிழக அரசு பொதுமக்களுக்கு தேவையான அனைத்துச் சான்றிதழ்களையும் விரைவாக வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக மின் ஆளுமையில் பதிவு செய்யும் அரசின் சேவைகளை வழங்கும் பொதுசேவை மையத்தை தாசில்தார் அலுவலகங்களில் தொடங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் பொது இசேவை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. இச்சேவை மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான வருவாய்த் துறையால் வழங்கப்படும் வருமானச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு மின் ஆளுமை அரசு சேவை வழங்கப்படுகிறது.
வருவாய்த் துறையின் சார்பில் வழங்கப்படும் சான்றுகள் பெறுவதற்கு பதிவுக் கட்டணமாக ரூ.50–ம், சமூக நலத்துறையின் சார்பிலான திட்டங்களில் பயன் பெறுவதற்கு பதிவுக் கட்டணமாக ரூ. 100–ம் என்ற கட்டணத்தில் பதிவு செய்யப்படுகிறது. பொது சேவை மையத்தில் சான்றுகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கு குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட தேவையான அனைத்து அசல் ஆவணங்களுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் பொது சேவை மையங்களில் இதுவரை 77 ஆயிரத்து 995 பயனாளிகள் பதிவு செய்து பயன் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.