.

Pages

Thursday, May 7, 2015

தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள அதிரை பகுதிகள் [ படங்கள் இணைப்பு ]

அதிரையில் கடும் வெயிலையும், சூட்டையும், வறட்சியையும் சந்தித்து வந்த அதிரையர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக முத்தம்மாள் தெரு, அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம், புதுத்தெரு, பிலால் நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது.

மிலாரிக்காடு, ஷிஃபா மருத்துவமனை அருகே உள்ள மின்சார கம்பியில் மரங்கள் சாய்ந்ததில் மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டிருந்தது. அறுந்த கிடந்த மின்கம்பிகளை சீர் செய்து முடிவடைந்ததும் இன்று காலை மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டது.

மேலும் அதிரையின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுகின்றன. வாய்க்கால் அடைப்புகளை சீர் செய்யும் பணிகளில் அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் அதிகாலை முதல் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.